முல்லைத் தீவில் தோண்டத் தோண்ட எலும்புக் கூடு

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (33)
Advertisement

இந்த செய்தியை கேட்க

கொழும்பு: இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த, முல்லைத்தீவுப் பகுதியில் உள்ள, மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில், நேற்று (12ம் தேதி) கட்டடம் கட்டக் குழிகள் தோண்டப்பட்டன. அங்கு கண்ணிவெடிகள் புதையுண்டு இருப்பது தெரியவந்தது.இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபுணர்களின் உதவியுடன் கண்ணிவெடிகளை அகற்ற முயன்ற போது, அங்கு, மனித எலும்புக்கூடுகள் இருப்பது தெரியவந்தது.நுாற்றுக்காணக்கானவர்கள் அங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் அப்பகுதி போலீஸ் மற்றும் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று காலை முதல் அப்பகுதியில் புதையுண்டுள்ள மனித எலும்புகளை எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.'பணிகள் முழுமையான நிறைவடைந்த பின்னரே, எவ்வளவு எலும்புக்கூடுகள் புதையுண்டு உள்ளன என்ற விவரம் தெரியவரும்' என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மனித எலும்புகள் காணப்பட்ட பகுதியில் ஆய்வு செய்த, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி லெனின்குமார், 'எலும்புக் கூடுகளை ஆய்வுக்கு உட்படுத்தி, இறந்தவர்களின் காலத்தை கண்டறிய வேண்டியுள்ளது. இப்பணியில் வரலாறு மற்றும் தொல்லியல் துறை ஆய்வாளர்களையும் ஈடுபடுத்த வேண்டும். ஆய்வு முடிவு வரும் வரை தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம்' எனத் தெரிவித்துள்ளார்.திசை திருப்ப முயற்சி


'மனித எலும்புகள் மீட்கப்பட்ட பகுதியில், மக்கிய நிலையில் பெண்களின் ஆடைகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன. இதனால், இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்த போது, தமிழர்களை கொன்று இங்கு புதைத்திருக்கலாம். இலங்கை அரசு இதை மூடிமறைக்கவோ, அல்லது பல நுாறு ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்களின் எலும்புகள் தான் கிடைத்துள்ளன என, திசை திருப்பவோ முயற்சிக்க வாய்ப்புகள் உள்ளன' என, இலங்கைத் தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
14-பிப்-202016:33:33 IST Report Abuse
Jaya Ram இதை ஐநா மனித உரிமைகள் ஆணையம் கவனிக்குமா அல்லது உள்நாட்டு போரின் போது ஓடி ஒளிந்த மாதிரி ஒளிந்துகொள்ளுமா வெட்கக்கேடான ஆணையம்
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
14-பிப்-202003:56:02 IST Report Abuse
vasumathi அவர்களுக்கு முறையான ஆத்ம சாந்தி பூஜைகள் நடப்பது நல்லது. நேர்மையான விசாரணை என்பது கஷ்டந்தான். பார்க்கலாம்..
Rate this:
Share this comment
Cancel
14-பிப்-202001:36:49 IST Report Abuse
N.K (நான் தண்டக்கோண் இல்லை) லன்ச் டைம் வந்ததும் போர் முடிஞ்சுருச்சுன்னு சொல்லி உண்ணாவிரதம் முடிச்சுட்டு ஏசியை தூக்கிகிட்டு போனாரே அவர் எங்க.
Rate this:
Share this comment
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
17-பிப்-202010:44:09 IST Report Abuse
மூல பத்திரம் போய்ட்டார்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X