அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக, அதிமுக.,விற்கு மாற்று நாங்களே!: சீமான் பேராசை

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (93)
Advertisement
NaamTamilar, Seeman, DMK, ADMK, NTK, நாம்தமிழர், சீமான், மாற்றுஅரசியல், அரசியல், மாற்றம்

இந்த செய்தியை கேட்க

சென்னை: 2021 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக.,விற்கு மாற்றாக நாங்கள் வருவோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

டில்லியில் தேசிய கட்சிகளுக்கு மாற்றாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உருவெடுத்துள்ளார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி 62 இடங்களில் வென்று தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது. எதிர்த்து போட்டியிட்ட பாஜ., 8 இடங்களில் வென்றது; காங்., ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதேபோல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தை தமிழர்கள் மட்டுமே ஆளவேண்டும் எனவும், திராவிட கட்சிகளுக்கு மாற்று நாங்கள் தான் எனவும் கூறி வந்தார்.




டில்லியில் நடந்த தேர்தல் நிகழ்வுகளால் சீமான் குஷியாகி உள்ளார். டில்லியை போல தமிழகத்திலும் மாற்று அரசியலை முன்னெடுத்து செல்ல சீமானுக்கு ஆசை வந்துள்ளது போல. அவர் அளித்த பேட்டியில், 2021ல் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக.,விற்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி வரும். டில்லியை போல ஒரு அரசியல் மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
14-பிப்-202020:49:21 IST Report Abuse
bal ஆமாம் நீங்கள்தான் மாற்று மாற்று என்று எல்லோரையும் மதம் மாற்றுகிறீர்களே...ஆனால் தஞ்சாவூர் ஹிந்து கோவிலில் முதல் மரியாதை ஒரு கேடு...
Rate this:
Share this comment
Cancel
14-பிப்-202005:40:59 IST Report Abuse
Ramesh Kumar கூட்டணி வைக்காமல் தனியாக இருப்பது ஒன்று தான் இவர்கள் செய்யும் உருப்படியான வேலை. எதிர்ப்பு அரசியலால் இந்த ஆள் வீணா போனார். இஸ்லாமியர், கிறுத்தவர் கூட்டம் என்றால் இந்து எதிர்ப்பு, இந்துக்கள் கூட்டம் என்றால் ஆரிய எதிர்ப்பு. ராணுவத்தையும் எதிர் விமர்சனம் செய்வது. மத்திய மாநில அரசுகள் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள். அவர்கள் எதை செய்தாலும் எதிர்ப்பு, வெறுப்பு பிரசாரம் செய்வதால் கோமாளியாக தெரிகிறார். மத மொழி விவகாரங்களில் இவர் வாயை மூடி கொள்ள வேண்டும். எதிர்ப்பு அரசியலை கைவிட வேண்டும். வளர்ச்சி திட்டங்களை வாய் கிழிய பேசுவதுதோடு மட்டுமல்லாது செயல்களை செய்துவிட்டு ஓட்டு கேட்க வேண்டும் ஆம் ஆத்மியை போல். இல்லையென்றால் காமெடி பீசாக மட்டுமே தெரிவார். மாற்று அரசியல் செய்யவும் ஒரு தகுதி வேண்டும். தமிழ் தமிழ் என்று கூவும் இவர் தமிழுக்கு என்ன தொண்டு செய்திருக்கிறார்.
Rate this:
Share this comment
தமிழ் தென்றல் - சென்னை,இந்தியா
14-பிப்-202010:51:06 IST Report Abuse
தமிழ் தென்றல்இவர் ஒரு அரசியல் வியாபாரி திமுகவுக்கு ஆதரவை மறைமுகமா செயல்படுபவர் . திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்கள் வேறு கட்சிக்கு கிடைக்காதவாறு அந்த ஓட்டை பெறுவதுதான் இவர் வேலை. உதாரணம் வேலூர் தேர்தல் இவர் திமுகவின் எதிர்ப்பு ஓட்டை பெற்று திமுகவை வெற்றி பெற வைத்தார். மேடைலை எல்லா கட்சியையும் திட்டினாலும் இவர் பனி திமுகவை வெற்றிபெற வைக்கத்தான் ரஜினியை எதிர்க்க திமுகவால் களமிறக்கப்பட்டவர்...
Rate this:
Share this comment
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
14-பிப்-202005:09:41 IST Report Abuse
Siva Kumar எதற்கு தமிழகத்தை மேலும் சூறை ஆடுவதற்கா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X