பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (8)
Advertisement
CoronaVirus, Affect, Kolkata, Delhi, India, கொரோனா, வைரஸ், பாதிப்பு, கோல்கட்டா, டில்லி, பாங்காக், சீனா

இந்த செய்தியை கேட்க

கோல்கட்டா: பாங்காக்கில் இருந்து இந்தியா வந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணம், வுஹான் நகரில் உயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் உருவானது. அந்த வைரஸ் சீனா மட்டுமின்றி, 27 நாடுகளுக்கு வேகமாகப் பரவியுள்ளது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை, 1355 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர 59,805க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் தாக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை, கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பை மாநில பேரிடராக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.




அதேபோல், ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் சொகுசு கப்பலில் 2 இந்தியர்களுக்கு கொரானா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில், பாங்காக்கில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் மூலம் டில்லி திரும்பிய ஒருவருக்கும், கோல்கட்டாவை சேர்ந்த 2 பேருக்கும் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
13-பிப்-202021:17:07 IST Report Abuse
venkatan வைரஸ்களை பற்றிய முழு ஆய்வு,அதன் அவதாரங்கள்,தொற்றியல், வாழும் சூழல்,மரபியல் போன்றவற்றை அறியப்பட்ட உடன்தான் தடுப்பு மருந்துகள், எதிர் உயிரி செயலிகள்,வேதிமருந்து போன்ற ஆக்க பூர்வமான நடத்தைகளை மேற்கொள்ள இயலும்..இதற்க்கு கால இடைவெளிகளை வரையறுக்க இயலாது.என் எனில் இறப்பு விளைவுகளை கட்டுப்படுத்த மானுடத்தின் ஆதங்கத்திற்கு விடை கிடைக்க வேண்டும்.கடவுளின் வரையறை இல்லா கருணை தான் பதிலளிக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Senthamizhsudar - Chennai,இந்தியா
13-பிப்-202020:19:39 IST Report Abuse
Senthamizhsudar ஸ்பைஸ் ஜெட் பிடியில் ஊத்தி கழுவியாகனும் அடுத்த பயணிகளுக்கு தொத்த போகுது
Rate this:
Share this comment
Cancel
13-பிப்-202017:43:51 IST Report Abuse
செந்தில் மொத்த பிளைட்ட்ட நல்ல சோதிச்சாச்சா? நம்மாளுவ எதயும் ஒழுங்கா செய்ய மாட்டானுவளே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X