பொது செய்தி

இந்தியா

இன்ஜி., படிக்க பிளஸ் 2வில் வேதியியல் கட்டாயமில்லை: ஏ.ஐ.சி.டி.இ.அறிவிப்பு

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (11)
Advertisement
AICTE, Engineering, Chemistry, Mandatory, Studies, Plus2, ஏஐசிடிஇ, இன்ஜினியரிங், படிப்பு, வேதியியல், பாடம், கட்டாயமில்லை

புதுடில்லி: அடுத்த கல்வியாண்டு முதல் இன்ஜினியரிங் படிக்க பிளஸ் 2வில் வேதியியல் பாடம் படிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) அறிவித்துள்ளது.

இந்தியாவில் இன்ஜி., படிப்புகளில் சேர, சில மாற்றங்களை செய்து ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. அதன்படி, இன்ஜி., படிப்பில் சேர அடுத்த கல்வியாண்டு (2020-21) முதல் பிளஸ் 2வில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்துடன் சேர்த்து ஏதேனும் விருப்பப்பாடத்தை சேர்த்து படித்திருந்தால் போதும். அதாவது, மேற்கூறிய இரு பாடத்துடன் வேதியியல், பயோடெக்னாலஜி, உயிரியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், தகவல் பயிற்சி, வேளாண்மை, பொறியியல் கிராபிக், வணிக ஆய்வுகள் ஆகிய விருப்பப்பாடங்களில் ஒன்றை சேர்த்து படித்திருந்தாலே இன்ஜி., படிப்புகளில் சேரலாம்.





இது குறித்த அறிக்கையை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட இன்ஜி., கல்லூரிகளுக்கும் ஏஐசிடிஇ அனுப்பியுள்ளது. இது தொடர்பாக ஏஐசிடிஇ அதிகாரி கூறுகையில்; இந்த மாற்றங்களால் இன்ஜி., படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அடுத்த ஆண்டு முதல் ஜேஇஇ (மெயின்) தேர்விலும் இதற்கான மாற்றம் செய்யப்படும், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
13-பிப்-202021:10:34 IST Report Abuse
Nallavan Nallavan கேனத்தனமான முடிவு .....
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-பிப்-202020:21:53 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஏற்கனவே மாடு மேய்க்க கூட துப்பில்லாத ஒரு மந்தையை வெளியே கொட்டும் பொறியல் கல்லூரிகள்.. இவனுங்க படிப்பை படிச்சிட்டு வர்ற தண்ட எஞ்சினியர்களுக்கு எஞ்சினியரிங் படிப்பே தேவையில்லை. பணத்துக்காகவே கல்லாரி நடத்தும் வியாபாரிகளின் லஞ்சத்துக்கு வேலை செய்ய ஒரு கேவலமான நிறுவனம்..
Rate this:
Share this comment
Cancel
Aaaaa - Bbbbbb,இந்தியா
13-பிப்-202020:00:45 IST Report Abuse
Aaaaa பொறியியல் பட்டப்படிப்பு தரம் குறைந்து வருவதற்கு முழு காரணமும் AICTE ன் தவறான கொள்கைகள் தவிர வேறு எதுவுமில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X