அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதுவிலக்கு என்ன ஆனது?: ஸ்டாலின் கேள்வி

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (105)
Advertisement
DMK, Stalin, Tasmac, MKStalin, ADMK, Resolution, TNPSC, திமுக, ஸ்டாலின், டாஸ்மாக், அதிமுக, மதுவிலக்கு, தனிநபர், தீர்மானம், டிஎன்பிஎஸ்சி

இந்த செய்தியை கேட்க

சென்னை: படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற அதிமுக.,வின் வாக்குறுதி என்ன ஆனது என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக அரசு, தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஜனவரி மாதம் வரையில் 5197 டாஸ்மாக் கடைகள் இருப்பதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2000 கடைகள் திறக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது. இதனை குறிப்பிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளில் 2000-க்கும் மேலான டாஸ்மாக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. மேலும் 200 கடைகள் திறக்கப்பட உள்ளனவாம்.

படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? சட்டசபையிலும், மன்றத்திலும் சொல்வது ஒன்று; செய்வது வேறு என அதிமுக இரட்டை வேடம் போட்டு வருகிறது. இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கலைஞர் பாணி:தனது மற்றொரு டுவிட்டில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, புதுச்சேரி அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை பாராட்டி அவர் பதிவிட்டுள்ளதாவது: சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர்.,க்கு எதிர்ப்பு, சமூகநீதிக்கான இடஒதுக்கீடு ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றி புதுவை வரலாற்றில் புரட்சிகர இடத்தை, முதல்வர் நாராயணசாமி பிடித்துள்ளார். 'இதனால் எனது ஆட்சியே போனாலும் கவலை இல்லை' என்ற அவரின் 'தலைவர் கலைஞர் பாணி' அஞ்சாமையை, மனமாரப் பாராட்டி, வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தனிநபர் தீர்மானம்:


நாளை (பிப்.,14) தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கலாகிறது. இந்த கூட்டத்தொடரில் டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என தனிநபர் கவன ஈர்ப்பு தீர்மான மனுவை தலைமை செயலகத்தில் திமுக அளித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (105)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாண்டவக்கோன் - Kolhapur Circle Belgaum,இந்தியா
14-பிப்-202008:16:27 IST Report Abuse
தாண்டவக்கோன் சூப்பர் ஸ்டார் தன வீட்டு கதவை திறந்து திமுகவின் மது ஆலைகள் எத்தனை என்று ஒரு ஸ்பீச் குடுத்தால் நல்ல ரீச் ஆகும் ... செய்வீர்களா
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
14-பிப்-202006:10:58 IST Report Abuse
blocked user அதிமுகவுக்கு சொன்னதை செய்வோம், செய்ததை சொல்வோம் என்ற கொள்கையெல்லாம் கிடையாது. திமுகவும் கூட வெறும் வசனம் பேச மட்டுமே பேசி இது போன்ற உளுத்துப்போன கொள்கைகளை கட்டி அழுகிறது. திரைக்கு பின் திமுகவினர் தான் இந்தத்தொழிலில் கொடி கட்டிப்பறப்பது. ஆகவே இந்தக்கேள்வி எனக்கு இரண்டு கண் போனது என்றாலும் கூட உனக்கு ஒரு கண்ணாவது போகவேண்டும் என்ற செல்ப் ஆப்பு என்றுதான் சொல்லவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
14-பிப்-202006:03:56 IST Report Abuse
elakkumanan intha சின்ன பிள்ளைகள் , தனக்கு ஏதாவது கிடைக்கவில்லையென்றால், எல்லா விஷயத்தையும் சொல்லி, சொல்லி அழுகும்.. .நீதான், எனக்கு முட்டாய் வாங்கித்தராலே................ஸ்கூல் லீவு போட விடல..................விசை படத்துக்கு கூட்டிட்டு போகல......ஐஸ் கிரீம் வாங்கி தரலே.........................ஹோமோ ஒர்க் செஞ்சு தரல னு......................அந்த வகையில இதுவும் சேர்த்துக்கணும்............கீழ விழுந்து புரண்டு அழுவுறாரு தம்புடு....................................கடைசியில, திறந்து விட்டவரே அடைக்க சொல்லி கூப்பாடு போடுறார்.........................கொம்பனிகள் நம்மளோடது...................அறிமுகப்படுத்துனது நம்மதான்...வளர்ந்துவிட்டது நாம்தான்.......................வளர்ந்ததும் நாமதான்.............................மூட சொல்ல கேக்குறதும் நாமதான்..............கொஞ்சம் கூட வெக்கம் , மானம், சூடு, சொரணையே இல்லாமல், இதுக்கும் ஒரு கூட்டம், முட்டு கொடுக்குறது.......................திராவிட ஈன பரிணாம வளர்ச்சியின் உச்சம்.......................பாய்ஸ் , கம ஆன்.................வந்து, எடப்பாடி மற்றும் அப்படியே (இலவச இணைப்பாக ) மோடியையும் திட்டி, கருத்து போடுங்கோ.........இன்றைய சம்பளத்தை வெல்லுங்கோ.....திராவிட வருமான வாய்ப்புகள் கொட்டி கிடக்கு...................அன்பர்கள் பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்...........................இங்கே வந்து கருத்து போடுவதோடு, திராவிட வழிமுறை முடிஞ்சு போச்சுப்பா..........ஆமாம், கம்பெனி வாசலுக்கெல்லாம் வந்து மூட சொல்லி போராட கூடாது.............அது, ஆரிய சூழ்ச்சி.......... இது என்ன ஸ்டெர்லிடா அல்லது கூடன்குளமா ? கவனமா திராவிட பணியை செய்து பயன் பெறவும்......................முடிஞ்சா, டெல்லியில ஒரு பெல்லி டான்ஸ் போராட்டம் ஏற்பாடு பண்றோம்......................பிரசாந்த் கிசோர் கிட்ட கேக்கணும்............அப்போ, பி ஜெ பி யை எதிர்த்து,மோடியை எதிர்த்து , தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டி, டெல்லியில் ..............................போராடுவோம்......அலை கடலென திரண்டு வந்து ஈன மானம் காப்பீர்........................................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X