மதுவிலக்கு என்ன ஆனது?: ஸ்டாலின் கேள்வி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதுவிலக்கு என்ன ஆனது?: ஸ்டாலின் கேள்வி

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (105)
Share
சென்னை: படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற அதிமுக.,வின் வாக்குறுதி என்ன ஆனது என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.அதிமுக அரசு, தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஜனவரி மாதம் வரையில் 5197 டாஸ்மாக் கடைகள் இருப்பதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2000 கடைகள் திறக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது.
DMK, Stalin, Tasmac, MKStalin, ADMK, Resolution, TNPSC, திமுக, ஸ்டாலின், டாஸ்மாக், அதிமுக, மதுவிலக்கு, தனிநபர், தீர்மானம், டிஎன்பிஎஸ்சி

இந்த செய்தியை கேட்க

சென்னை: படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற அதிமுக.,வின் வாக்குறுதி என்ன ஆனது என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக அரசு, தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஜனவரி மாதம் வரையில் 5197 டாஸ்மாக் கடைகள் இருப்பதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2000 கடைகள் திறக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது. இதனை குறிப்பிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளில் 2000-க்கும் மேலான டாஸ்மாக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. மேலும் 200 கடைகள் திறக்கப்பட உள்ளனவாம்.


latest tamil news



படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? சட்டசபையிலும், மன்றத்திலும் சொல்வது ஒன்று; செய்வது வேறு என அதிமுக இரட்டை வேடம் போட்டு வருகிறது. இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.




கலைஞர் பாணி:



தனது மற்றொரு டுவிட்டில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, புதுச்சேரி அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை பாராட்டி அவர் பதிவிட்டுள்ளதாவது: சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர்.,க்கு எதிர்ப்பு, சமூகநீதிக்கான இடஒதுக்கீடு ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றி புதுவை வரலாற்றில் புரட்சிகர இடத்தை, முதல்வர் நாராயணசாமி பிடித்துள்ளார். 'இதனால் எனது ஆட்சியே போனாலும் கவலை இல்லை' என்ற அவரின் 'தலைவர் கலைஞர் பாணி' அஞ்சாமையை, மனமாரப் பாராட்டி, வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.




தனிநபர் தீர்மானம்:


நாளை (பிப்.,14) தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கலாகிறது. இந்த கூட்டத்தொடரில் டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என தனிநபர் கவன ஈர்ப்பு தீர்மான மனுவை தலைமை செயலகத்தில் திமுக அளித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X