வித்தியாசமாக காதலை சொன்ன இளைஞர்: கூகுள் மேப்பில் சிக்கிய காட்சி வைரல்| Dinamalar

வித்தியாசமாக காதலை சொன்ன இளைஞர்: கூகுள் மேப்பில் சிக்கிய காட்சி வைரல்

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (1)
Share

பெர்லின்: காதலை வெளிப்படுத்துவதை ஆங்கிலத்தில் புரபோசல் (love proposal) என்கிறோம். புரபோசலை பெண்களைவிட ஆண்களே முதலில் செய்கிறார்கள். அப்படி ஆண்கள் செய்யும் புரபோசல்கள், பெருமளவில் நிராகரிக்கப்படுகின்றன.

இதனால் சிலர், தம் புரபோசல் மிகவும் வித்தியாசமாகவும், தன் காதலி ஏற்கும் வகையிலும் இருக்க வேண்டும் என, ரொம்பவே மெனக்கெடுகிறார்கள். அப்படி, ஜெர்மனைச் சேர்ந்த ஸ்டீபன் ஸ்க்வார்ஸ் என்ற இளைஞர் ஒருவர், தன் காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலைச் சொல்ல முடிவு செய்தார்.



latest tamil news




தனது மக்காச்சோள வயலில் காட்டுப்பன்றிகள் ஊடுறுவியுள்ளதாகக் கூறி, அவற்றைப் பார்க்குமாறு ட்ரோன் ஒன்றைக் காதலியிடம் கொடுத்துள்ளார். ட்ரோனை பறக்கவிட்ட, ஸ்டீபனின் காதலிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

ட்ரோன் மேலே பறக்க, ஸ்டீபனின் மக்காச்சோள வயலில் 'என்னைத் திருமணம் செய்துகொள்வாயா?' என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்து காதலை ஏற்றுக் கொண்டார்.


latest tamil news



இந்நிலையில், கனடாவில் வசிக்கும் ஸ்டீபனின் அத்தை, ஒரு படத்தை அவருக்கு அனுப்பியுள்ளார். அதில், ஸ்டீபனின் வயலும் அதில் எழுதப்பட்டிருப்பதும் மிகத் தெளிவாகத் தெரிந்தது.

இதைக் கண்டதும் தான், ஸ்டீபனுக்கு புரிந்தது, தனது புரோபசலை, தன் காதலி மட்டுமல்ல, கூகுள் மேப் மூலமாக உலகமே பார்த்திருக்கிறது; வைரலாக்கி இருக்கிறது என்று.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X