கோர்ட் செய்தி

தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் இருவருக்கு ஜாமின் மறுப்பு

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

சென்னை: டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் கைதான இடைத்தரகர் மற்றும் பணம் கொடுத்து வேலை வாங்கியவர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது.



latest tamil news



டிஎன்பிஎஸ்சி குரூப் - 4, குரூப் 2A தேர்வில், பெரும் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் நடத்திய விசாரணையில், முறைகேடு நடந்தது உறுதியானது. இதையடுத்து டிஎன்பிஎஸ்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகார், சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்களின் விசாரணையில், மெகா மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்ட இடைத்தரகர்கள், பணம் கொடுத்து வேலை வாங்கியவர்கள் என பலர் கைது செய்யப்பட்டனர். இடைத்தரகராக செயல்பட்ட போலீசாக பணியாற்றும் முத்துக்குமார் என்பவர் வேலை வாங்கி தருவதாக கூறி 7 பேரிடம் ரூ 40 லட்சம் பெற்றதாக அவர் மீதும், ரூ 13 லட்சம் பெற்று பணி பெற்றதாக ஆனந்தன் என்பவர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில் இடைத்தரகராக செயல்பட்ட முத்துக்குமார் மற்றும் பணம் கொடுத்து வேலை பெற்ற ஆனந்தன் இருவரும் ஜாமின் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இவர்கள் இருவருடைய ஜாமீன் மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜாமின் மறுக்கப்பட்ட ஆனந்தன் சார்பதிவாளர் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muraleedharan.M - Chennai,இந்தியா
14-பிப்-202005:04:08 IST Report Abuse
Muraleedharan.M அயோக்கிய பயல்கள் கொட்டாங்குச்சி வக்கீல் துணை கொண்டு ஜாமீன் வாங்கிவிடுவர்.
Rate this:
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
13-பிப்-202022:18:55 IST Report Abuse
rajesh மொத்த திருட்டு பயலுகளும் ஒரு வாரத்துக்குள்ளே வெளியே வந்து விட்டுவார்கள் என்னயென்றால் நம் நாட்டின் சட்டத்தோட டிசைன் அப்பிடி
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
13-பிப்-202021:12:07 IST Report Abuse
சீனி ஏமாற்றுகாரர்களை அரசு அதிகாரியாக நியமித்ததில், டென்பிஸ்சி மேல் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். கோர்ட்டும் அதே தவறை செய்ய வேண்டாம், பல பேரை எமாற்றி வேலைக்கு சேர்ந்த கிரிமினல்களான இவர்களை சிறையில் அடைக்கும் வரை ஜாமீன் வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X