ஜப்பானில் 'கொரோனா'வுக்கு முதல் பலி

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020
Advertisement
coronavirus,kovid19,japan,first_death,கொரோனா,கோவிட்19,கோவிட்,ஜப்பான்,பலி

டோக்யோ: ஜப்பானில் 'கோவிட்-19' என பெயரிடப்பட்டுள்ள 'கொரோனா' வைரஸ் தாக்கி ஒருவர் பலியானார். இது அந்நாட்டில் கொரோனாவுக்கு முதல் பலி என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

சீனாவில், கடந்தாண்டு டிசம்பரில் இருந்து, 'கொரோனா' வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 1,355 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 42,200 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்த கொரோனா வைரசுக்கு, உலக சுகாதார அமைப்பு, 'கோவிட் - 19' என, அதிகாரப்பூர்வமாக பெயர் வைத்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் தான் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது. சீனாவில் துவங்கி ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும், சீனாவிலிருந்து திரும்பிய கேரள மாணவிக்கு வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.





இந்நிலையில் ஜப்பானில் 'கொரோனா' வைரஸ் தாக்குதலுக்கு ஆளான ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது, ஜப்பானில் கொரோனாவுக்கு ஏற்பட்ட முதல் உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் 250 பேர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஜப்பானில் நிறுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் 218 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


உயர்மட்ட குழு அமைத்தது இந்திய அரசு



இந்நிலையில் கொரோனா குறித்து கண்காணிக்க உயர்மட்டகுழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள், கண்காணிப்பு, ஆய்வு போன்ற பணிகளை உயர்மட்ட குழு மேற்கொள்ளும். பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் படி இந்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X