பொது செய்தி

இந்தியா

ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.13 தான்! கேரள அரசு முடிவு

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (8)
Advertisement
Kerala,bottled_water,price,PinarayiVijayan,கேரளா,பினராயி,குடிநீர்,விலை,குறைவு

திருவனந்தபுரம்: கேரளாவில், ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.13க்கு மட்டுமே விற்க வேண்டும். கூடுதலாக விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

தாகத்தை தணிக்க பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குடிநீர், ஒருலிட்டர் ரூ.20க்கு விற்கப்பட்டு வருகிறது. பஸ் ஸ்டான்ட், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் 30 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. இந்நிலையில், குடிநீர் பாட்டிலின் விலையை அதிரடியாக குறைத்து கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.





பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் குடிநீர் பாட்டிலை சேர்த்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலை ரூ.13க்கு விற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கு அந்த மாநில மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.





இதுகுறித்து அம்மாநில உணவுத்துறை அமைச்சர் திலோத்தமன் கூறுகையில், 'ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்களை ரூ.12க்கு விற்க அரசு முடிவு செய்தது. ஆனால், வர்த்தகர்கள் எதிர்ப்பால், ரூ.13 என இறுதி செய்யப்பட்டது. அனைத்து குடிநீர் பாட்டில்களுக்கும் பி.ஐ.எஸ் தரச் சான்று அத்தியாவசியம் என அரசு முடிவெடுத்துள்ளது. இதன்மூலம் அங்கீகாரம் பெறாத குடிநீர் பாட்டில்கள் விற்பனை முற்றிலும் ஒடுக்கப்படும். புதிய விலை விரைவில் அமலுக்கு வரும்' இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
14-பிப்-202006:08:49 IST Report Abuse
Nathan வெளியே செல்லும்போதே கையுடன் வீட்டு சுத்த நீரை கொண்டு செல்லுதல் நலம். பாட்டில் நீரை கூட நம்புவதற்கில்லை. எப்ப தயாரித்ததோ. அலுவலகத்துக்கு, சிறிய சிட்டி பயணத்துக்கு , சினிமாக்கு ஒரு பாட்டில், நீளமான ரயில் பயணத்துக்கு ஐந்து லிட்டர் பாட்டிலும் அநேகர் இப்பவும் கொண்டு செல்கின்றனர். பல்வலியே வராத வஜ்ரதந்து பவுடர் இருக்க கண்ட அயல்நாட்டு பற்பசைகளை உபயோகித்து, பல்வலியும் பல்வைத்தியர் பில்லும் தண்டம் அழுவது போல, நன்னீர் நம் கையில் இருக்க , காசு நீர் கடையில் வாங்கி தொண்டைக்கட்டில் அவதியுறுவானேன்.
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
14-பிப்-202006:07:31 IST Report Abuse
 Muruga Vel அம்மா குடிநீர் பத்து ரூபாய் தான் ..
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
14-பிப்-202003:45:43 IST Report Abuse
Rajagopal கேரளாவில் எப்போது தண்ணீர் பஞ்சம் வந்தது? ஏன் பாட்டில் தண்ணீரைக் குடிக்கிறார்கள் அங்கே? நம் ஊரில் என்றால் புரிந்து கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X