டில்லி தோல்விக்கு காரணம் இதுதான்: அமித் ஷா

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (76)
Advertisement
AmitShah,BJP,Delhi_loss,அமித்ஷா,பாஜ,டில்லி,தேர்தல்,தோல்வி

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலுக்கு பிரசாரம் செய்த பா.ஜ., தலைவர்களின் பேச்சே தோல்விக்கு காரணமாக அமைந்தது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

டில்லியில் நடந்த 'டைம்ஸ் நவ்' மாநாட்டில் கலந்து கொண்டு அமித் ஷா பேசியதாவது: டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ., தலைவர்கள், ஷாஹின்பாக் எதிர்ப்பாளர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் எனவும், டில்லி ஓட்டுக்களை, இந்தியா - பாக்., போட்டியுடன் ஒப்பிட்டும் பேசினர். சிலர் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதி எனவும் கூறினர். இதுபோன்ற கருத்துக்களை பா.ஜ., தலைவர்கள் கூறியிருக்கக் கூடாது. இதுவே அங்கு பா.ஜ.,வின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.


3 நாட்கள் அவகாசம்:


ஆனால் டில்லி தோல்வி, குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக விழுந்த ஓட்டுக்களால் அல்ல. நான் 3 நாட்கள் அவகாசம் அளிக்கிறேன். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விவாதிக்க விரும்புவோர் அதற்குள் என்னுடன் விவாதம் நடத்தி கொள்ளுங்கள். காங்., மதத்தின் அடிப்படையில் நாட்டை பிளவு படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

70 தொகுதிகளுக்கு நடந்த டில்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைபற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. பா.ஜ., 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்.,க்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. அதைவிட, போட்டியிட்ட 66 இடங்களில் 63 இடங்களில் அக்கட்சி டெபாசிட் இழந்தது.

Advertisement
வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ashak - jubail,சவுதி அரேபியா
20-பிப்-202010:13:40 IST Report Abuse
ashak நான் கூட EVM சரியா செட்டிங் போடலன்னு சொல்வாருன்னு நினைத்தேன்
Rate this:
Share this comment
Cancel
Kumar periyaar - Chennai,இந்தியா
18-பிப்-202018:22:41 IST Report Abuse
Kumar periyaar அது இல்லை அங்கு evm கோளறுபடி இல்லாமல் வடை சுட்டு பார்த்தீர்கள் வேலைக்கு ஆக வில்லை, நமக்கு தேவையோ இந்தியாவின் பாராளுமன்ற தேர்தல் தானே அதில் மட்டும் evm குளறுபடி தேவை
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16-பிப்-202009:22:58 IST Report Abuse
skv srinivasankrishnaveni விழுந்த ஓட்டுக்கள் 64%மீதிபேருங்கபோடலீங்க ஆமாத்மி இஷ்டத்துக்கு இலவசம்களை வாரிவழங்க மக்களீன்னு இலவசம்களுக்கே மதிமயங்கிப்போட்டாங்க வோட்டு இதுதான் கரெக்டுங்கோ , தமிழாநாடுதான் பிச்சைக்காரங்கள் அதிகம் இருக்கு என்று எண்ணினேன் ஆனால் தலைநகரில் அதிகமாயிட்டாங்கோ போல இருக்கே மக்கள் தங்கள்பரசை இருக்கமாபிடிச்சுண்டு இதெல்லாம் பிரியா கிடைக்கும் என்று அலையுறானுக என்று தெரியுதே பொதுஜனம் காலிலே மத்திமம் அண்ட் ஏழைகள் தவிர நெறையப்பணம் இருக்கிறவா தான் பிள்ளைகள் திருமணத்துள்ளே நெறைய வதக்ஷனை வாங்கிகுவிச்சுபோறாளேன்னு வாழவனாத மருமகள்களை அடிச்சுவெரட்டுறாங்க இதே பேய்குணம் ஆந்திர கருநாடகம் பஞ்சாபி லே தமிழ்நாட்டுலே பலரிடம் இருக்கு சிலர் வாங்கறதும் இல்லீங்க கொடுப்பதும் இல்லீங்க லவ் மேரேஜ் என்றாலும் பிள்ளைவீட்டுக்கு கப்பம் காட்டிஏவோனும் இதுலே வித் லெந்து வெறும்பய வரை பேதமே இல்லீங்க பொன்னுபெறாதவனெல்லாம் பண்ற அநியாயம் அவ்ளோகேவலம் அசிங்கம் ஆபாசம் . ஆம் ஆத்மி பொண்ணைப்பெற்றவனாட்டம் எல்லாம் வாறிவாளங்கிருக்கான் இலவசம் என்று இதன் ரிசல்ட் மாத்தயாராசிதம்கைஏந்துவான் பாருங்க கடன் என்று அப்போது தெரியும் இதே போல பலகோடிகளும் பட்ஜெட் போட்டுறாய்ங்க தமிழ்நாட்டுலே கஜானா குளோரெவரும்படி டாஸ்மாக்கேல்ந்துமட்டும்தானே இதர கொடிகளுக்கே மதிய அரசிடம் கையேந்துங்கள் என்று எந்தப்போறானுக மத்தியிலே என்ன கஜானா நிரம்பியாவழியுது ????????பிஜேபி உம்மை திட்டம்களெல்லாம் சூப்பராயிருக்குங்க ஓகே அதை எப்படி நிறைவேற்றுவீர்கள் , உங்களை சுற்றி இருப்பது நாற்புறமும் சோதனைகள் பாவமாயிருக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X