சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

ரஜினியாவது துணிந்து பேசினாரே!

Added : பிப் 13, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
 ரஜினியாவது துணிந்து பேசினாரே!

டாக்டர் இரா.அசோகன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: கர்நாடகாவிலிருந்து, பிழைக்க வந்தவர், ஈ.வெ.ராமசாமி நாயக்கர். இவர், தமிழ் சமுதாயத்துக்கு அப்படி என்னென்ன செய்தார் என்பதை, ஒவ்வொன்றாக இக்காலத் தமிழர்களுக்கு எடுத்து வைப்பது, ஒவ்வொரு தமிழரின் கடமை...

'தமிழர்கள் காட்டுமிராண்டிகள்; தமிழ் காட்டு மிராண்டி மொழி' என்றார், ஈ.வெ.ரா., அதுமட்டுமின்றி, 'ஹிந்து மதத்தை காட்டுமிராண்டி மதம், கடவுள் இல்லவே இல்லை; கடவுளை நம்புகிறவர்கள், காட்டு மிராண்டிகள்; அடி முட்டாள்கள்' என்றார். 'தமிழர்களின், சிலப்பதிகாரம் விபசார புத்தகம்; கற்பு, காதல், சத்தியம், நீதி, ஒழுக்கம் என்பதெல்லாம் வெறும் பூச்சாண்டி. ஒரு ஆண், இரண்டு மனைவிகளுடன் வாழ்ந்தால், பெண்களும் மூன்று ஆசை நாயகர்களுடன் வாழலாம். பிறர் மனைவியை அபகரிப்பது தவறல்ல என, அரசு அறிவிக்க வேண்டும்.
'திருக்குறள் என்ற நுாலில், மலம் என்ற கெட்ட நாற்றம் வீசும். அரசியல் சட்டத்தை யாரும் ஏற்கக் கூடாது. அதை நெருப்பில், போட்டு கொளுத்துவோம்' என, முழங்கினார், ஈ.வெ.ரா.,'நான் சாகும் வரை, கறுப்புக் கொடி ஏற்றி, சுதந்திர மற்றும் குடியரசு தினங்களை துக்க தினமாகவே கொண்டாடுவேன். பார்ப்பனனையும், பாம்பையும் பார்த்தால், பாம்பை விட்டு பார்ப்பனனை மட்டும் அடி, என்பேன்' என்றார்,

ஈ.வெ.ரா.,இப்படி எல்லாம் பேசிய, ஈ.வெ.ரா., வெட்கம், மானம், ரோஷங்களை உதறி, தமிழர்களை ஏமாற்றி, ஏராளமான நன்கொடையாக, அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை பெற்றார். இதன் வாயிலாக அவர் பெற்ற மதிப்பு, இன்றைய நிலவரப்படி, 1 லட்சம் கோடி ரூபாய் இருக்கும்.

இன்று, ஈ.வெ.ரா., பெயரை பயன்படுத்தி, தி.க., கட்சி மற்றும் அவர் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும், கி.வீரமணி பயன்படுத்தி வருகிறார்.இத்தருணத்தில், 'ஹிந்து மதத்தை, தி.க.,வினர் அவமதித்து விட்டனர்' என, சில உதாரணங்களை காட்டி, நடிகர் ரஜினிகாந்த் பேசி இருந்தார். இதை, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.ஈ.வெ.ரா., வழியை பின்பற்றி, வீரமணியும் தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிராக செய்து வரும் பிரசாரங்களை, ரஜினியாவது துணிந்து எதிர்த்து பேசியது, ஹிந்துக்களின் மனதில் தாரை வார்க்கிறது!

கிருஷ்ணசாமி கூறியதை காட்டிலும் இதை செய்தால் நல்லது!

வி.எம்.கலைப்பித்தன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: அரசு விதிகளின் படி, முறையாக நடக்கும் தனியார் பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் வசூலிக்கும் கட்டணங்களை விட, மிகக்குறுகிய காலத்தில், 'நீட்' தேர்வுக்காக நடத்தப்படும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், கோடி கோடியாக சம்பாதித்து வருகின்றன.

இத்தருணத்தில், 'நீட் தேர்வுக்காக நடத்தப்படும் தனியார் பயிற்சி மையங்களை, முறைப்படுத்த வேண்டும்' என, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறி இருக்கிறார். அதை விட, 'நீட்' தேர்வுக்காக நடத்தப்படும், தனியார் பயிற்சி மையங்கள் அனைத்தையும் மூடினால், நன்றாக இருக்கும். அந்த பயிற்சி மையங்களில் நடக்கும் கட்டணக் கொள்ளை தான், காரணம். 'நீட்' தேர்வுக்கான மையங்களை மூடி, அவற்றுக்கான சிறப்பு வகுப்புக்கள் தினமும் ஒரு மணி நேரம், பள்ளிகளிலேயே, பயிற்சிகளை நடத்த வேண்டும். அங்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி கட்டணம், அரசே வழங்கலாம். அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, அந்தந்த கல்வி நிறுவனங்களே, குறிப்பிட்ட தொகையை வழங்கலாம்.

ஆனால், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு நிர்ணயித்து வழங்கும், அதே சிறப்பு கட்டணத்தையே, தனியார் பள்ளிகளிலும் வழங்க வேண்டும் என, அறிவுறுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் நடத்தப்படும், 'நீட்' தேர்வுக்கான, தனிப்பயிற்சி வகுப்புகளுக்கு எதிராக புகார் எழுப்பப்பட்டால், அவற்றிற்கு தடை விதிக்க, அரசு முன் வர வேண்டும். 'நீட்' பயிற்சி வகுப்பு நடத்தப்படும் எல்லாப் பள்ளிகளிலும், ஒரே கட்டணம் வசூலிக்க, அரசே நிர்ணயம் செய்து, கண்காணிக்கலாம்.

டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி மையங்களிலும், அரசே ஒரு கட்டணத்தை நிர்ணயித்து, அதை ஒட்டியே, பயனாளிகளிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும்; அதற்கான விதிகளை இயற்றி, அரசே கண்காணிக்கலாம். பயிற்சி மையங்கள் தவிர்க்க இயலாதது தான். ஆனால், கொள்ளை மையங்களாக மாற, அரசு இடம் அளிக்கக்கூடாது!

வரி விதிப்பு கொள்கைகள் எப்படி அமையணும்!

பொன்.கருணாநிதி, பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: ௨௦௧௮ல், உலக அளவில், பணக்காரர்களின் செல்வம், நாள் ஒன்றுக்கு, ௧௭ ஆயிரத்து, ௮௦௧ கோடி ரூபாய் அதிகரித்தபடி வருகிறது; இது, ௧௨ சதவீதம். இந்தியாவை பொறுத்தவரை, ௧௦ சதவீத பேர், நாட்டின் வளத்தில், ௭௭.௪ சதவீதம் வசதியை பெற்றவராக உள்ளனர்.

நாட்டிலுள்ள, 130 கோடி பேரில், ௫௦ சதவீத மக்களிடம் உள்ள செல்வமும், ஒன்பது கோடீஸ்வரர்களிடம் உள்ள செல்வமும் மநிலையில் உள்ளது. ௨௦௧௮ - ௨௦௨௨க்கும் இடைப்பட்ட காலத்தில், ௭௦ புதிய கோடீஸ்வரர்கள் உருவாகக்கூடிய வாய்ப்பும் உள்ளது; இப்படி, 'ஆக்ஸ் பேம்' என்ற மனித உரிமைக் கழகத்தின் அறிக்கை கணித்துள்ளது.

'இந்தியாவின் பணக்காரர்களிடம் கூடுதலாக, ௦.௫ சதவீத வரி விதித்தால் மருத்துவத்துக்காக, அரசு செலவிடும் தொகையில், கூடுதலாக, ௫௦ சதவீத பணம் கிடைக்கும்' என, 'ஆக்ஸ்பேம்' அறிக்கை கூறுகிறது. இதன்படி, இந்தியாவில், தற்போதுள்ள பெருங்கோடீஸ்வரர்களின் மொத்த எண்ணிக்கை ௧௧௯. இவர்களின் ஒட்டு மொத்த செல்வம், இன்று, ௨௮ லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது.

இத்தருணத்தில், சொத்துக்கு உச்ச வரம்பு கொண்டு வர முடியுமா என, யாரும் கணிக்க முடியாது. ஏற்கனவே உருவாக்கப்பட்ட நில உச்சவரம்பு சட்டத்தின் செயல்பாடுகள் இன்றும் நடைமுறையில் இருக்கின்றன. ஆனால், அந்த சட்டத்தை செயல்படுத்துவதில் தான், குறைபாடுகள் உள்ளன.

இந்த ஆண்டு பட்ஜெட் தயாரிக்கும் முன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'ஆக்ஸ் பேம்' அறிக்கையை, ஒருமுறை படித்து இருந்தால், அவருக்கு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன், ஊன்றுகோலாக இருந்திருக்கும். வரி விதிப்பு கொள்கைகள் எப்படி அமைய வேண்டும் என்பதை, 'ஆக்ஸ்பேம்' அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இனியாவது, மத்திய நிதி அமைச்சர் 'ஆக்ஸ்பேம்' அறிக்கையை படிப்பார் என நம்பலாம்!

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
18-பிப்-202010:50:34 IST Report Abuse
venkat Iyer திரு.அசோகன் அவர்களே,இப்படி துணிந்து பேசியதால் அவர் பகுத்தறிவு வாதி மற்றும் அவருக்கு பெரியார் என்று யார் பட்டம் கொடுத்தார்கள்.கடைசி காலத்தில் தனது சிறுநீர் பையை கையில் வைத்து கண்டு திரிந்ததாக நானும் செய்திகளை படித்தேன்.அவர் அரசியலுக்கு வந்து மக்கள் செல்வாக்கில் வெற்றி பெற்றாரா?.
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
15-பிப்-202006:18:30 IST Report Abuse
D.Ambujavalli நல்ல, பயனுள்ள கருத்துக்களையெல்லாம் படித்தும், நடைமுறைப்படுத்தியும் வரி விதிப்பதெல்லாம் அமைச்சரின் வேலையா ? அவ்வையார், வள்ளுவர் என்று மேற்கோளுடன் தனது பாண்டித்தியத்தை மூன்று மணி நேரம் விளம்பரப்படுத்துவது மட்டும்தான் அவருக்குத் தெரியும்
Rate this:
Share this comment
Cancel
Raja Chockalingam - Madurai,இந்தியா
14-பிப்-202010:49:53 IST Report Abuse
Raja Chockalingam ஈ வே ராமசாமி நாயக்கரை பற்றி மிக தெளிவாக விவரம் கொடுத்த உங்களுக்கு நன்றி . அவரை நம்பும் சில தமிழர்கள் இப்போதாவது உண்மையை தெரிந்து கொள்ளட்டும். திருந்தட்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X