சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : பிப் 13, 2020
Advertisement
 'டவுட்' தனபாலு

பா.ஜ., முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: தேர்தல் வியூகம் வகுப்பாளர், பிரசாந்த் கிஷோர் திறமைசாலி; தேர்தல் நுணுக்கங்கள் தெரிந்த அரசியல் டிரைவர். தமிழகத்தில் அவர் ஓட்ட உள்ள, தி.மு.க., எனும் கார், பந்தயத்துக்கு தகுந்த கார் அல்ல; 50 ஆண்டு பழமையான கார். அந்த காருக்கு, நான்கு டயர்கள் கூட கிடையாது.
'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்லும், தி.மு.க., தான், டில்லியில், லோக்சபாவில் மூன்றாவது பெரிய கட்சி; தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சி; 50 ஆண்டுகளாக தொண்டர்கள் பலம் வாய்ந்த கட்சி. தமிழக பா.ஜ., தான், டிரைவர் இல்லாத, தேய்ந்த டயர் கொண்ட ஓடாத கார். உதாரணத்தை மாற்றி சொல்லி விட்டீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது.

காங்., தேசிய செய்தித்தொடர்பாளர் நடிகை குஷ்பு: டில்லி சட்டசபை தேர்தலில், நம் கட்சி, தொடர்ந்து இரண்டாவது முறையாக, ஒரு இடத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் தோல்வியடைந்துள்ளது. நாம் சரியான பாதையில் இருக்கிறோமா என்று கேட்டால், 'இல்லை' என்றே பெரிதாக பதில் வரும். அடிமட்டத்தில் இருந்து உயர் மட்டம் வரை பல விஷயங்களைச் சரி செய்ய வேண்டும்.

'டவுட்' தனபாலு: தி.மு.க., பொருளாளர் துரைமுருகன், 'காங்கிரசுக்கு இங்கு ஓட்டு கிடையாது. எங்கள் கூட்டணியை விட்டு, அக்கட்சி விலகினாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது' என, சில நாட்களுக்கு முன் அறிவித்தார். அப்போது, மாநில காங்., தலைவர் அழகிரி உட்பட பலருக்கு ரத்தம் கொதித்தது. இப்போது, டில்லி சட்டசபை தேர்தல் முடிவு, காங்கிரசின் எதிர்காலத்தை, உங்களுக்கும், கட்சியினருக்கும் அறிவுறுத்தியுள்ளது என்பது, 'டவுட்' இல்லாமல் தெரிகிறதே!
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: சென்னையில் நடைபெற்ற, அ.தி.மு.க., ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் இ.பி.எஸ்., 'என்னை மாதிரி அனைவரும் பணியாற்ற வேண்டும்' என, அ.தி.மு.க.,வினரை கேட்டுக் கொண்டுள்ளார். அவர் கூறியதை கேட்டால் சிரிப்பு தான் வருகிறது.

'டவுட்' தனபாலு: பிறகு, 'தி.மு.க., தலைவர் ஸ்டாலின் போல, தேச நலனில் விதண்டாவாதம் பேச வேண்டும்; அனைத்து பிரச்னைக்கும் அறிக்கை அளிக்க வேண்டும்; சமுதாயத்தை ஜாதி, மத ரீதியாக பிளவுபடுத்த வேண்டும்' என்றா கேட்டுக் கொள்வார்... அவரைப் போல பணியாற்ற வேண்டும் என, அவர் கேட்டுக் கொண்டதால், பி.எம்.டபிள்யு., டயோடா இன்னோவா, ஆடி கார்களில் சொகுசாக வலம் வரும் அவரது கட்சியினர், 'டவுட்'டே இல்லாமல், அதிர்ச்சி அடைந்திருக்கத் தான் செய்வர்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X