சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : பிப் 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'ஆனால், அந்த திருமண மேடையில், உங்களையும், பிற தலைவர்களையும் சிக்கனமே இல்லாமல், அனைவரும், பல மணி நேரம் புகழ்ந்து தள்ளியிருப்பரே... அதை விடுங்க... நீங்க இந்த திருமணத்திற்கு வர, எவ்வளவு பணம் வாங்கினீர்கள், கோவையில் வழி நெடுக போஸ்டர் ஒட்டியிருந்தாங்களே... அதுக்கான செலவு எவ்வளவுன்னு, வெளிப்படையா சொன்னா நல்லா இருக்கும்... மக்கள் தெரிஞ்சுக்கட்டுமே...' என கேட்கத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேச்சு:

பத்து நிமிடங்களில், இந்த மேடையில், இரண்டு திருமணங்கள் நடந்துள்ளன. உலகில் வேறு எங்கும் நடந்திராத சிக்கனமான திருமணம் இது. சிக்கனம் என்றால், நேரம் கூட இதில் சிக்கனம். இரண்டு சிறிய மாலைகள் மட்டும் தான் செலவு. இது தான் சுயமரியாதை திருமணம். இந்த கொள்கைகளை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.

'சங்க கால இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் இருப்பதையே, திராவிட கட்சிகள் தெரியாமல் செய்து விட்டனவே...' என, ஆதங்கப்பட வைக்கும் வகையில், தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு:

தமிழில் சங்க கால இலக்கியம், காப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் என, ஏராளமாக உள்ளன. இவற்றை, மாணவர்கள் கற்று உணர்ந்து, அதன்படி நடக்க வேண்டும்.

'இந்த விவகாரத்தில் தான், அ.தி.மு.க., அரசின் செயலற்ற தன்மை, சந்தி சிரிக்கிறதே; நீங்கள் வேறு சொல்ல வேண்டுமா...' என, கூறும் நிலையில், தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் பேட்டி:

அத்திக்காயை பிளந்தால் சொத்தை என்பது போல, தமிழகத்தின் ஊழல்கள் ஒவ்வொன்றும் வெளிவர தொடங்கி உள்ளன. டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, வி.ஏ.ஓ., தேர்வு உட்பட பல தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளது.

'அப்பாடா... இப்போது தான் நிம்மதி என்ற ரீதியில் இருக்கிறது உங்களின் அறிக்கை...' என, சொல்லத் தோன்றும் வகையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் செல்லக்கண்ணு அறிக்கை:

எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு ஆதரவாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை வரவேற்கிறோம். தலித் மக்களின் உரிமையை நிலை நிறுத்தும் இந்த தீர்ப்பை, எங்கள் முன்னணி வரவேற்கிறது. இதற்காக பல போராட்டங்களை நடத்திய அமைப்புகளுக்கு நன்றி.

'தமிழக எதிர்க்கட்சிகள், இன்னும் சில ஆண்டுகளில், '8 வயது வரை, தமிழக மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்ல வேண்டாம்' என, போராட்டம் நடத்துவர். அதற்கும், உங்களைப் போன்ற அமைச்சர்கள் ஒப்புக்கொண்டு, பள்ளிக்கூடங்களை மூடினாலும் மூடுவர்...' என, எரிச்சலை காட்டும் வகையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி:

மாணவர்களின் கல்வி நலன் கருதியே, 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளோம். இந்த நடவடிக்கைக்கு, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமல்ல. அதே நேரத்தில், எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம், இனிமேல் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-பிப்-202009:45:29 IST Report Abuse
Bhaskaran திராவிட காட்சிகள் மேடையில் பேசுவதற்கு அர்ஜுனனையும் கம்பனையும் மணிவாசகரையும் எடுத்துக்கொள்வார்கள் கைதட்டல் வாங்குவதற்கு .மறைந்த காளிமுத்து இறுதியில் பக்தி இலக்கியங்களில் ஆர்வம் காட்டினார் .இப்போதிருக்கும் அல்லக்கைகளுக்கு இதெல்லாம் எங்கே தெரியப்போகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X