சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

'தொகுதி பக்கம் தலைகாட்டணும்!'

Added : பிப் 13, 2020
Advertisement
 'தொகுதி பக்கம் தலைகாட்டணும்!'

'எங்கள் கட்சியினர் எல்லாரும் வெற்றிக் களிப்பில் திளைக்கும்போது, நான் மட்டும் சோர்ந்து போயிருந்தேன். நல்ல வேளை, வெற்றி பெற்று விட்டேன்' என, படபடப்பு விலகாமலேயே கூறுகிறார், டில்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா.

இவர், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வலது கரம். ஆம் ஆத்மி கட்சிக்கான கொள்கைகளை வகுப்பது, முக்கிய முடிவுகளை அறிவிப்பது என, எல்லா விஷயத்திலும், கெஜ்ரிவாலுக்கு ஆலோசனை வழங்குவது சிசோடியா தான். டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகத் துவங்கியதும், ஆம் ஆத்மி கட்சியினர் மகிழ்ச்சி அடைந்தனர். வெற்றியை, இனிப்பு வழங்கி, உற்சாகமாக கொண்டாடினர்.

ஆம் ஆத்மியின், பெரும்பாலான தலைவர்கள் வெற்றியை நோக்கி முன்னேறியபோது, மணீஷ் சிசோடியா மட்டும், பின் தங்கியிருந்தார். இதனால், அவரது முகம் வெளிறிக் காணப்பட்டது. அவரது ஆதரவாளர்களும் சோர்வடைந்தனர். மாலையில் நிலைமை மாறியது.

மணீஷ் சிசோடியா, கணிசமான ஓட்டுகளை பெற்று முன்னுக்கு வந்தார். இறுதியில், 6,000 ஓட்டுகள் வித்தியாசத்தில், அவர் வெற்றி பெற்றார். அதற்கு பின் தான், சிசோடியா முகத்தில், மகிழ்ச்சியை காண முடிந்தது. 'டில்லி மக்கள், நம்மை மட்டும் கைவிட்டு விட்டனரோ என அதிர்ச்சியாகி விட்டது. எப்படியோ, என் தலை தப்பியது; இனிமேல், தொகுதி பக்கம் அடிக்கடி தலையை காட்ட வேண்டும்' என்கிறார் சிசோடியா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X