பொது செய்தி

இந்தியா

புல்வாமா தாக்குதல்: இன்று நினைவு தினம்

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 13, 2020
Share
Advertisement
காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது பாக். , பயங்கரவாதிகள் நடத்திய தூக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதன் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.காஷ்மீரில் 2019 பிப்.,14 ம் தேதி புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்புரா அருகில், ஜம்மு ஸ்ரீநகர்தேசிய நெடுஞ்சாலையில், 78 வாகனங்களில் 2,500 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர்.
புல்வாமா தாக்குதல்: இன்று நினைவு தினம்

காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது பாக். , பயங்கரவாதிகள் நடத்திய தூக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதன் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

காஷ்மீரில் 2019 பிப்.,14 ம் தேதி புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்புரா அருகில், ஜம்மு ஸ்ரீநகர்தேசிய நெடுஞ்சாலையில், 78 வாகனங்களில் 2,500 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பகல் 3:15 மணிக்கு கிளைச்சாலையில் இருந்து புறப்பட்ட ஆதில் அகமது தர் என்ற தற்கொலைப்படை பயங்கரவாதி, வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ராணுவ வீரர்களின் வாகனம் மீது மோதி வெடிக்க செய்தார். இதில் 40 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். 35 வீரர்கள் காயமடைந்தனர். இது 1989க்குப்பின் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய பெரிய தாக்குதலாக அமைந்தது.

இச்சம்பவத்துக்க பாக்., ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கமான மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் - இ - முகமது பொறுப்பேற்றது. இச்சம்பவம், நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. பாக்., பயங்கரவாதிகளுக்கு பதிலடி தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இத்தாக்குதலுக்கு பதிலடியாக, 2019 பிப்.,26ம் தேதி பாகிஸ்தானின் பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாத முகாம் மீது, இந்திய விமானப்படையின், 'மிராஜ்-2000' போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தின. இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X