பொது செய்தி

இந்தியா

கறுப்பு பட்டியலுக்கு பயந்து ஹபிஸ் சயீதுக்கு சிறை: இந்தியா குற்றச்சாட்டு

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (10)
Advertisement
India,Pakistan,HafizSaeed,LashkareToiba_chief,LashkareToiba,Mumbai_terror_mastermind

புதுடில்லி: எப்.ஏ.டி.எப்., ஆய்வுக் கூட்டம் நடைபெற, நான்கு நாட்கள் உள்ள நிலையில், பாகிஸ்தானில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபிஸ் சயீதுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக, இந்திய அரசு கருத்து தெரிவித்து உள்ளது.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாதிகளுக்கு அளிக்கப் படும் நிதியுதவியைத் தடுப்பதற்கான கொள்கைகளை வகுக்க, 'ஜி -- 7' அமைப்பைச் சேர்ந்த நாடுகளால், எப்.ஏ.டி.எப்., எனப்படும், நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு, 1989-ல் உருவாக்கப்பட்டது. ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர், பாரிசை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பு, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்யும் நாடுகளை, கறுப்பு பட்டியல் மற்றும் 'கிரே' பட்டியல் என, இரு வகைகளாக பிரிக்கிறது.


பரிமாற்றம்:கறுப்பு பட்டியலில் உள்ள நாடுகள், ஒத்துழைக்காதவை என வகைப்படுத்தப்பட்டு, அவற்றுடன், உலக நாடுகள், நிதி தொடர்பான எந்த பரிமாற்றத்தையும் வைத்துக் கொள்ளாது. கிரே பட்டியலில் உள்ள நாடுகள், எந்த நேரத்திலும், கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படலாம் என்ற எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன. இவை, உலக நாடுகளிடம் இருந்து, கடன் பெறுவதில் சிக்கல் இருக்கும்; பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்.

பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த விவகாரத்தில், எப்.ஏ.டி.எப்., பாகிஸ்தானை கடந்த ஆண்டு கிரே பட்டியலில் சேர்த்தது. 'பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்குவது மற்றும் பண மோசடிகளை, 2020 பிப்ரவரிக்குள், முற்றிலும் நிறுத்த வேண்டும். 'இல்லாவிட் டால், ஈரான் மற்றும் வடகொரியாவுடன் சேர்த்து, பாகிஸ்தானும் கறுப்புப் பட்டியலில் இடம் பெறும்' என, எப்.ஏ.டி.எப்., எச்சரித்திருந்தது.

இந்நிலையில், எப்.ஏ.டி.எப்., ஆய்வுக் கூட்டம், பிரான்சில் இன்னும் நான்கு நாட்களில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், பயங்கரவாதத்தை ஒழிக்க, பாகிஸ்தான் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, ஆய்வு செய்யப்பட உள்ளது. அப்போது, தங்களின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை, உலக நாடுகளுக்கு உணர்த்துவதற்காகவே, ஹபிஸ் சயீதுக்கு, இரண்டு வழக்கு களில், தலா ஐந்தரை ஆண்டு கள் சிறை தண்டனை விதித்து, பாக்., நடவடிக்கை எடுத்துள்ளதாக, இந்திய அரசு தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவசியம்:மேலும், பாக்.,கில் இருந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் மற்ற அமைப்புகள் மீதும், அந்நாட்டு அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பதையும், உலக நாடுகள் கவனத்தில் கொள்வது அவசியம் என, இந்திய தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஹபிஸ் சயீதுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதை, அமெரிக்கா வரவேற்று உள்ளது.

'ஹபிஸ் சயீதுக்கு வழங்கப்பட்டுள்ள சிறை தண்டனை மூலம், பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பது மற்றும் அவர்களின் நடவடிக்கைகளை ஒழிப்பதில், பாக்., உறுதியாக உள்ளது என்பதை, உலக நாடுகள் அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesh - Chennai,இந்தியா
16-பிப்-202002:30:16 IST Report Abuse
Venkatesh பாகிஸ்தான் , அமெரிக்காவுக்கு மிகவும் பிடித்த மருமகள் , பாகிஸ்தான் தெரிந்தே அட்டூழியம் செய்தாலும் அதை கண்டுகொள்ளவே மாட்டார்கள் , என் மருமகள் உடைத்தால் அது எப்போதும் பொன் குடம்
Rate this:
Share this comment
Cancel
Naga Subramanian - Kolkatta,இந்தியா
15-பிப்-202007:21:17 IST Report Abuse
Naga Subramanian அவனை பாகிஸ்தானை விட்டு நாடு கடத்தி வாழ்நாள் முழுதும் கடும் சிறையில் இட வேண்டும். அதுவரை இதுவொரு நாடகம்தான்.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
15-பிப்-202000:01:56 IST Report Abuse
Tamilan உலகம் விபரமறியாதவர்களின் கையில் உள்ளது . அதை வெற்றிகரமாக ஏமாற்றுபவர்கள் பட்டியலில் பாகிஸ்தானும் ஒன்று .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X