உயர் நீதிமன்றத்துக்கு நிரந்தர நீதிபதிகள் நியமனம்| Dinamalar

உயர் நீதிமன்றத்துக்கு நிரந்தர நீதிபதிகள் நியமனம்

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (3)
Share
புதுடில்லி: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, ஒன்பது பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து, உச்ச நீதிமன்ற, 'கொலீஜியம்' உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான கொலீஜியம், நீதிபதிகள் நியமனம் குறித்து முடிவு செய்வதற்காக நேற்று முன்தினம் கூடியது. இதில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, ஒன்பது பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்படுவதாக முடிவு
HighCourt,SupremeCourt,collegium,Judges,சுப்ரீம்கோர்ட்,ஐகோர்ட்,நீதிபதிகள்

புதுடில்லி: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, ஒன்பது பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து, உச்ச நீதிமன்ற, 'கொலீஜியம்' உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான கொலீஜியம், நீதிபதிகள் நியமனம் குறித்து முடிவு செய்வதற்காக நேற்று முன்தினம் கூடியது. இதில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, ஒன்பது பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது.

நீதிபதிகள், பி.டி.ஆஷா, எம்.நிர்மல் குமார், சுப்பிரமணியம் பிரசாத், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ண ராமசாமி, சி.சரவணன், பி.புகழேந்தி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுஉள்ளனர். மேலும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக, ராகுல் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

குஜராத் உயர் நீதிமன்றத்துக்கு, ஜஸ்வந்த்ராய் வோரா, கீதா கோபி, அசோக் குமார், ராஜேந்திர எம் சரீன் ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்கப்படுவதாகவும் கொலீஜியம் அறிவித்தது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான கொலீஜியத்தில், நீதிபதிகள், என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எப்.நாரிமன், ஆர்.பானுமதி ஆகியோர் இடம் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X