பொது செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரி ஆரோவில்லில் திருவிழா

Added : பிப் 13, 2020
Share
Advertisement
 புதுச்சேரி ஆரோவில்லில் திருவிழா

புதுச்சேரி: புதுச்சேரி ஆரோவில்லில், தேசிய நாடகப்பள்ளி சார்பில் நடத்தப்படும் நாடகத் திருவிழா, 18ம் தேதி வரை நடைபெறும்.

மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்படும், டில்லி தேசிய நாடகப் பள்ளி சார்பில், 21வது, 'பாரத் ரங் மகோத்சவம்' இணை நாடகத் திருவிழா, புதுச்சேரி அருகே ஆரோவில்லில் அமைந்துள்ள, ஆதிசக்தி அரங்கில், நேற்று முன்தினம் மாலை துவங்கியது. இந்த நாடக விழா, 18ம் தேதி வரை நடக்கிறது. நாடக விழாவை, புதுச்சேரி தலைமை செயலர் அஸ்வனிகுமார் துவக்கி வைத்தார். தேசிய நாடகப் பள்ளி தலைவர் அர்ஜூன்தேவ் சரண், நடிகர் நாசர் முன்னிலை வகித்தனர்.தேசிய நாடகப்பள்ளி டீன் அபிலாஷ்பிள்ளை, தேசிய நாடகப் பள்ளி பொறுப்பு இயக்குனர் சுரேஷ் வர்மா உட்பட, பலர் பங்கேற்றனர்.சுவீரன் எழுதி, இயக்கிய, 'பாஸ்கரப் பட்டேளரும் தொம்மியுடே ஜீவிதமும்' என்ற மலையாள நாடகம் நடைபெற்றது. இந்த நாடக விழாவில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குழுக்கள் பங்கேற்கும், ஏழு நாடகங்கள் நடைபெறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X