வன தீ பரவாமல் தடுக்க முதுமலைக்கு நவீன உபகரணம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வன தீ பரவாமல் தடுக்க முதுமலைக்கு நவீன உபகரணம்

Added : பிப் 13, 2020
Share
 வன தீ பரவாமல் தடுக்க முதுமலைக்கு நவீன உபகரணம்

கூடலுார்: முதுமலையில் தொடரும் வறட்சியால், வனத்தில் தீயை பரவாமல் தடுக்க, முதன் முறையாக, நவீன உபகரணங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில், வறட்சி காரணமாக, தீ பற்றி, காடுகளில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதை தடுக்க, முதுமலை வெளிவட்ட பகுதியில், 400 கி.மீ., மற்றும் உள்வட்ட பகுதியில், 100 கி.மீ.,க்கு, தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.மேலும், வாகன போக்குவரத்திற்கு பயன்படும் சாலையோரங்களில், தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்படுகிறது.மசினகுடி உள்ளிட்ட வனப்பகுதியில், மரங்களில் பரண் அமைத்து, தீ பரவுவது குறித்து, கண்காணிப்பு பணி நடக்கிறது.நடப்பாண்டு, வனத் தீயை கட்டுப்படுத்தும் வன ஊழியர்களின் பாதுகாப்பை கருதி, 'மாஸ்க்' மற்றும் தொப்பி, கண் கண்ணாடி ஆகியவை, ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும், தீயை அணைக்க, 60 ஆயிரம் ரூபாயில், நவீன தீயணைப்பு இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.வனத்துறையினர் கூறுகையில், 'வன ஊழியர்களின் பாதுகாப்பை கருதி, உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன.'இதன் மூலம், வனத் தீயை விரைவாக கட்டுப்படுத்த முடியும். எனினும், வனத் தீ ஏற்படுவதை தடுக்க, வனத்துறைக்கு, மக்கள் ஒத்துழைக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X