சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணறில் குதித்த தாய் குழந்தை உயிருடன் மீட்பு

Added : பிப் 13, 2020
Advertisement
 கிணறில் குதித்த தாய் குழந்தை உயிருடன் மீட்பு

திருச்சி: திருச்சியில், குடும்பத் தகராறு காரணமாக, 9 மாத குழந்தையுடன் கிணறில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர், திருச்சி, சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மைதிலி, 30, என்ற பெண்ணை, சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். அவர்களுக்கு, 9 மாத பெண் குழந்தை உள்ளது.குடும்பத் தகராறு காரணமாக, கடந்த மாதம், சுப்பிரமணியபுரத்தில் உள்ள, தன் பெற்றோர் வீட்டுக்கு, குழந்தையுடன் மைதிலி சென்றார்.'கணவர் அழைத்துச் செல்ல வரவில்லையே' என, மனமுடைந்த மைதிலி, நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, வீட்டின் அருகில் இருந்த, 30 அடி கிணறில், குழந்தையுடன் குதித்து, தற்கொலைக்கு முயன்றார்.சத்தம் கேட்டு, பெற்றோர் மற்றும் உறவினர்கள், அங்கு வந்து பார்த்தபோது, கிணற்றில் இருந்த, 5 அடி தண்ணீரில், குழந்தையுடன், மைதிலி தத்தளித்தார்.

தகவல் அறிந்த, திருச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர்.கயிறு ஏணியை பயன்படுத்தி, கிணற்றுக்குள் இறங்கிய, தீயணைப்பு வீரர் மைக்கேல், தாய் மற்றும் குழந்தையை, உயிருடன் மீட்டு, மேலே அழைத்து வந்தார்.அவரை, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X