சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'போக்சோ ' கைதி தப்பியோட்டம்

Added : பிப் 13, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 'போக்சோ ' கைதி  தப்பியோட்டம்

கோவை: கோவையில், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டவர், தப்பியோடினார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள, குண்டடம் பகுதியைச் சேர்ந்தவர், சுப்ரமணி, 31; கட்டட தொழிலாளி. இவர், 14 வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்தார்.இதையடுத்து, செப்., 6ம் தேதி, பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும், 'போக்சோ' சட்டத்தில், சுப்ரமணி கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அக்., 2ம் தேதி, அவர் மீது, குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், சிறையில் இருந்த சுப்ரமணிக்கு, 31ம் தேதி வலிப்பு ஏற்பட்டதால், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, நேற்று அதிகாலை, 4:30 மணியளவில், கழிப்பறைக்கு சென்றவர், 'வென்டிலேட்டர்' கம்பியை வளைத்து, அதன் வழியாக தப்பியோடினார்.சுப்ரமணி வெளியே வராததால், பாதுகாப்புக்கு சென்ற போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அவர் தப்பியது தெரிந்தது.'ரேஸ்கோர்ஸ்' போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul Rahman - Madurai,இந்தியா
15-பிப்-202018:59:54 IST Report Abuse
Abdul Rahman கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாத போலீஸ்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X