அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு திருமாவளவன் பாராட்டு

Added : பிப் 13, 2020 | கருத்துகள் (2)
Advertisement

பெரம்பலுார்: ''காவிரி டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு, முதல்வரை பாராட்டுகிறேன்,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

பெரம்பலுாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:காவிரி டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கும், கடலுாரில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளதையும், வி.சி., சார்பில் வரவேற்று, முதல்வரை பாராட்டுகிறேன்.டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள முதல்வர், அது குறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.ராஜிவ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பாக, கவர்னர் விரைவில் முடிவு எடுக்க வேண்டும்.

தமிழக அரசு, இது தொடர்பாக, மீண்டும் ஒரு தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பி, அழுத்தம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
14-பிப்-202003:19:31 IST Report Abuse
Baskar இப்போது பாரா ட்டி பேசினால் தான் .தேர்தல் வருகிறது எப்படியும் நீங்கள் தி.மு.க கூட்டணியில் இருக்க போவதில்லை. அதனால் இப்போதே முதல்வருக்கு துண்டு போட்டு வைக்கிறீர்கள் என்பது எங்களுக்கு புரியும்
Rate this:
Share this comment
karutthu - nainital,இந்தியா
15-பிப்-202017:26:56 IST Report Abuse
karutthuஇவர் தான் எம் பீ ஆகிவிட்டார் இன்னும் ஐந்து வருடங்களுக்கு கவலை இல்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X