கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது: மதுரை உயர்நீதிமன்றம்

Added : பிப் 13, 2020
Advertisement

மதுரை; நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த கோரிய வழக்கில், 'மார்ச், 4ல் பதில் மனு தாக்கல் செய்ய, மாநில தேர்தல் ஆணையத்துக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொது நல மனு: தமிழகத்தில், 9 மாவட்டங்கள் தவிர, பிற மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடவில்லை.நகர்ப்புற மக்களுக்கு சுகாதாரம், குடிநீர், சாலை உட்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிட, மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.

நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு விசாரித்தது.மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், 'இந்திய தேர்தல் கமிஷன், பிப்., 14ல் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறது. 'அதன் அடிப்படையில், உள்ளாட்சிகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். அதன்பின், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு எப்போது தேர்தல் நடத்துவது என்பது குறித்து, முடிவு செய்யப்படும். 'பதில் மனு தாக்கல் செய்ய, கால அவகாசம் வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள், 'மாநில தேர்தல் ஆணையம், மார்ச், 4ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X