அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொளஞ்சியப்பர் கோவிலில் துர்கா சுவாமி தரிசனம்

Added : பிப் 13, 2020 | கருத்துகள் (4)
Advertisement
 கொளஞ்சியப்பர் கோவிலில் துர்கா சுவாமி தரிசனம்

விருத்தாசலம்; விருத்தாசலம் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில், தி.மு.க., தலைவரின் மனைவி துர்கா, நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம், மணவாளநல்லுாரில், சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், பிராது கட்டி வேண்டினால், மூன்று நாளில் துவங்கி மூன்று மாதங்களில், நிறைவேறும் என்பது ஐதீகம்.தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா, நேற்று காலை, 10:00 மணியளவில், கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வந்தார்.

அவர், சுவாமி முன் அமர்ந்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களையும் ராசி, நட்சத்திரத்துடன் குறிப்பிட்டு, அர்ச்சனை செய்தார். பின், அலுவலகத்திற்கு சென்று, மூன்று மாதங்களுக்கு உரிய பிராது கட்ட ணமாக, 500 ரூபாயை செலுத்தி, பிராது சீட்டு பெற்றார்.

இதையடுத்து, கொளஞ்சியப்பர் சுவாமியிடம் ஆசி பெற்று, முனியப்பர் சன்னிதியில் எலுமிச்சை பழம் சொருகி, சீட்டு கட்டினார்.தொடர்ந்து, 10:20 மணியளவில் புறப்பட்டு, தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்றார். மேற்கு மாவட்ட செயலர் கணேசன், எம்.எல்.ஏ., உடனிருந்தார். துர்கா ஸ்டாலின் வருகையின்போது, தி.மு.க.,வினர் யாரும் வர வேண்டாம் என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் வரவில்லை. அதுபோல், யாரும் புகைப்படம் எடுக்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.'ஸ்டாலின் முதல்வராக வேண்டி, அவரது மனைவி, கொளஞ்சியப்பர் கோவிலில் பிராது கட்டி, வேண்டியிருக்கலாம்' என அக்கட்சியினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16-பிப்-202008:59:23 IST Report Abuse
skv srinivasankrishnaveni இந்தம்மா செய்றா பூஜைகளால் தான் ஐயா சொஸ்தமா இருக்காங்க
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16-பிப்-202005:12:11 IST Report Abuse
J.V. Iyer அம்மணி உங்கள் கணவராலும் குடும்பத்தாராலும் தமிழகத்திற்கு கேடு வராமல் இருக்க வேண்டிக்கொள்ளவும்.
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
16-பிப்-202004:06:42 IST Report Abuse
meenakshisundaram வீட்டுக்குள்ளே சமஸ்க்ரிதம் ,வெளியே தமிழ்'?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X