பொது செய்தி

தமிழ்நாடு

சிறுமுகை அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைப்பு

Added : பிப் 13, 2020
Advertisement
 சிறுமுகை அருகே  சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைப்பு

மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே, கன்றுக் குட்டி மற்றும் ஆடுகளை கொன்று சாப்பிட்ட சிறுத்தையை பிடிக்க, வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம், சிறுமுகை அடுத்த பெத்திக்குட்டை அருகே தேங்கல்கரடு பகுதியில், முருகன் என்பவர் வளர்த்து வந்த கன்று குட்டியை, 10ம் தேதி இரவு, ஒரு சிறுத்தை கொன்று சாப்பிட்டதை, நேரில் பார்த்துள்ளார். முருகன் சத்தம் போட்டதால், சிறுத்தை ஓட்டம் பிடித்தது. இதேபோல், 12ம் தேதி இரவு, கோவில்மேடு பகுதியில், சரவணன் என்பவரது ஆட்டை, சிறுத்தை கடித்து கொன்றது. பீதி அடைந்த விவசாயிகள், வனத்துறையினரிடம் முறையிட்டனர். சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன் கூறுகையில், ''பெத்திக்குட்டை கோவில்மேடு பகுதியில், சிறுத்தை நடமாட்டம் உள்ளது. சிறுத்தையை பிடிக்க, தேங்கல்கரடு பகுதியில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் சிறுத்தை சிக்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X