சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விதிமீறிய பைக் பயணம்

Added : பிப் 13, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
 விதிமீறிய பைக் பயணம்

விழுப்புரம்: கிளியனுார் அருகே, இரண்டு இருசக்கர வாகனங்கள், நேருக்கு நேர் மோதிய விபத்தில், இருவர் இறந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த நல்லாவூரைச் சேர்ந்தவர் ராஜசேகர், 35. இவர், நேற்று முன்தினம் இரவு, கிளியனுாரில், தன் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.அங்கிருந்து, 10:00 மணிக்கு, தன் மகன் ஹரீஷ், 16, நண்பர்களின் மகன்கள் அமுதவாணன், 18, ராமன், 25, ஆகியோருடன், ஒரே இருசக்கர வாகனத்தில், நல்லாவூருக்கு சென்றார்.விதி மீறி, நான்கு பேர் பயணம் செய்த நிலையில், திண்டிவனம் - புதுச்சேரி சாலையில், கிளியனுார் சோதனைச்சாவடி அருகே, 'ராங் ரூட்'டில் சென்றனர்.

அப்போது, கடலுார் மாவட்டம், தொரப்பாடியைச் சேர்ந்த ஸ்ரீதர், 20, மற்றும் சென்னை, கிண்டியை சேர்ந்த, நண்பர் விஜய், 18, ஆகியோர் சென்ற, இருசக்கர வாகனம் மீது, ராஜசேகர் ஓட்டி வந்த பைக், நேருக்கு நேர் மோதியது.இந்த விபத்தில் ராஜசேகர், ஸ்ரீதர் ஆகியோர், சம்பவ இடத்திலேயே இறந்தனர். விபத்தில் படுகாய மடைந்த மற்ற அனைவரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.விபத்து குறித்து, கிளியனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
16-பிப்-202014:59:42 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இந்த விபத்தில் நேர்மையாக சாலைபோக்குவரத்து ரூல்படி வண்டி ஒட்டியவரும் பலியானார். இவருடைய குடும்பத்திற்கு அரசு அதிக அளவில் நிதி உதவி செய்திடல் வேண்டும். விதி மீறி பயணம் செய்து இறந்தவருக்கோ அல்லது காயம் அடைந்தவர்களுக்கோ அரசு எந்த உதவியும் செய்ய கூடாது.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
16-பிப்-202005:01:42 IST Report Abuse
 nicolethomson ஒரு பைக்கில் நான்கு பேரா? எப்பா
Rate this:
Share this comment
Nathan - Hyderabad,இந்தியா
16-பிப்-202008:04:10 IST Report Abuse
Nathanசொன்னாலும் புரியாது, சுயமாவும் தெரியாது, மத்தபடி எல்லா சாமர்த்தியமும் உண்டு ம்பாங்க. பரலோக வழி மாத்திரம் தள்ளுபடி இல்லாம திறந்தே இருக்கும். அவசரமா அடைய வேண்டிய இடத்துக்கு போகாம அங்க போக இதுவும் வழி. ( இதை ஆஸ்தீகர்கள் விதி என்பார்கள்)...
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
16-பிப்-202012:29:25 IST Report Abuse
madhavan rajanதவறு செய்யும் இவர்கள் போனால் பரவாயில்லை. பிறரையும் அல்லவா அனுப்புகிறார்கள். பல நகரங்களில் இரண்டு அல்லது மூன்று பிள்ளைகளை பள்ளிக்கு கொண்டு செல்கிறார்கள். அவர்களையெல்லாம் பிடித்து வண்டியை ஒரு மாதம் பிடிங்கி வைத்தால் திருந்துவார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X