அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை: விஜய் ரசிகர்கள்

Added : பிப் 13, 2020 | கருத்துகள் (7)
Advertisement
 தமிழக அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை: விஜய் ரசிகர்கள்

புதுக்கோட்டை: தமிழக அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், புதுக்கோட்டையில், நடிகர் விஜயின் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன், கடலுார், நெய்வேலியில், மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயை, வருமான வரித் துறையினர் பிடித்து, சென்னைக்கு அழைத்துச் சென்று, விசாரணை நடத்தினர். அவர் வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும், வருமானத்துக்கு அதிகமாக, சொத்து சேர்த்திருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

அதேநேரம், 'வருமான வரித்துறையின் சோதனை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை' என, அவரது ரசிகர்கள், சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.புதுக்கோட்டையைச் சேர்ந்த விஜய் ரசிகர் மன்ற, முன்னாள் மாவட்டத் தலைவர் ஸ்டாலின் என்பவர், 'அரசியல்வாதிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்' என்ற தலைப்பில், போஸ்டர்கள் அடித்து ஒட்டி உள்ளார்.போஸ்டரில், 'நடிகர் விஜயை, நாங்கள், ரசிகர்களின் மாஸ்டராக பார்க்கத்தான் விரும்புகிறோம். ஆனால், அவரை, நீங்கள் உங்களது ஹெட்மாஸ்டராக ஆக்கி விடாதீர்கள்' எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amma - montreal,கனடா
18-பிப்-202009:34:50 IST Report Abuse
amma ஒரு நல்ல இந்தியா குடிமகன் என்றால் சட்டத்துக்கு மதிப்பளித்து வருமான வரிகளை ஒழுங்காக kata வேணும். பல கொடிகள் சமபதித்து ஏழை மக்களின் பணத்தில் வாழ்ந்து வரியும் காட்டாமல் ஏமாற்ற நினைத்தாள் சட்டமா தந்து கடமையயை செய்யம். சுமை மண்டைக்குள் மசாலா இல்லாத அப்பாவி ரசிகர்கள் தாங்கள் கஸ்டப்பட்டு உழைத்தும் இன்னமும் ஏமாந்து கொண்டு இருக்கிறாள். எல்லோரும் புரட்சித்தலைவரை போல ஆகி விட முடியாது.அந்த கரங்கள் எப்போது கொடுத்து சிவந்த கரம்.
Rate this:
Share this comment
Cancel
R.Selvaperumal - kuwait,குவைத்
17-பிப்-202018:35:23 IST Report Abuse
R.Selvaperumal இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அவனை கொல்லுங்க ......
Rate this:
Share this comment
Cancel
krish - chennai,இந்தியா
17-பிப்-202017:57:59 IST Report Abuse
krish பெருத்த ரசிகர் ஆதரவுடன், சரக்கு மாஸ்டர் ஆக பெரும் வாய்ப்பு உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X