கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வாராக்கடன் பட்டியல்

Added : பிப் 13, 2020
Advertisement

மதுரை; வங்கி கடனை திரும்ப செலுத்தாத நிறுவனங்களின் பட்டியலை வெளியிட கோரிய வழக்கை தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருநெல்வேலி, கூனியூர் சுந்தரவேல் தாக்கல் செய்த பொதுநல மனு:பொதுத்துறை வங்கிகளில், மிகப் பெரிய நிறுவனங்கள் பெற்ற, 3 லட்சம் கோடி ரூபாய் கடனை செலுத்தவில்லை. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவை வாராக் கடனாக தள்ளுபடி செய்யப்படுகிறது. சாதாரண மக்களின் விவசாயம், சிறுதொழில், கல்விக் கடனை கட்டாயப்படுத்தி வசூலிக்கின்றனர்.கடனை திரும்ப செலுத்தாத பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட வேண்டும். கல்விக்கடன், 55 ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய வேண்டும் என, மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.

நீதிபதிகள், எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு, 'மனுதாரர் விளம்பர நோக்கில், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில், வழக்கு தொடர்ந்துள்ளார்; இது ஏற்புடையதல்ல' என்றனர். மனுதாரர் தரப்பில், வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள், 'மனுதாரருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம். இத்தொகையை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும். மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X