பொது செய்தி

இந்தியா

ஏர்-இந்தியா ஊழியர்களுக்கு நன்றி: பிரதமர் கடிதம்

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (7)
Advertisement
CoronaVirus,AirIndia,Modi,PM,appreciation,letter,பிரதமர்,மோடி,ஏர்இந்தியா,கடிதம்

புதுடில்லி: சீனாவிலிருந்து 'கொரோனா' வைரஸ் பாதிப்பிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஏர்-இந்தியா ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில், கடந்தாண்டு டிசம்பரில் இருந்து, 'கொரோனா' வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 1,355 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் துவங்கி இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான், பிரான்ஸ் உட்பட பல நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி உள்ளது.

இந்நிலையில் ஹுபெய் மாகாணத்தில், சிக்கியிருந்து இந்திய மாணவர்களை இந்தியா அழைத்து வரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியது. இதன்படி, 'ஏர் இந்தியா'வின் 'ஜம்போ பி - 747' விமானம், வூஹான் சென்று முதல் பயணத்தில் 324 இந்தியர்களையும், இரண்டாவது பயணத்தில் 323 இந்தியர்களையும் பத்திரமாக டில்லி அழைத்து வந்தது.

இந்த மீட்பு பணியை ஏர்-இந்தியாவை சேர்ந்த 34 பேர் அடங்கிய குழு வெற்றிகரமாக செய்து முடித்தது. மீட்பு குழுவின் தலைவராக கேப்டன் அமிதாப் சிங் செயல்பட, கேப்டன்கள் கமல் மோகன், சஞ்சய், ரீஷா, பூபேஷ் நரேன் ஆகியோர் விமானத்தை இயக்கினர்.

இந்நிலையில், சீனாவிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் துணிச்சலாக செயல்பட்ட ஏர்-இந்தியா ஊழியர்களை பாராட்டி, அவர்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார். இக்கடிதத்தை, விமான போக்குவரத்து அமைச்சர், மீட்பு குழுவிடம் ஒப்படைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganapathi Ramani - Chennai,இந்தியா
14-பிப்-202007:48:36 IST Report Abuse
Ganapathi Ramani நம் தேசிய விமான நிறுவனத்தை மட்டம் தட்டி ஏளனமாக பார்க்கும் பயணிகளே , இந்தியர்களுக்கு வெளிநாட்டில் ஆபத்து ஏற்படும்பொழுது ஏர் இந்தியா தான் கைகொடுக்கும் , மறவாதீர். நன்றி மறப்பது நன்றன்று
Rate this:
Share this comment
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
14-பிப்-202013:21:47 IST Report Abuse
Naam thamilarஅதனால் தான் இதை இந்த பிஜேபி அரசு விற்கிறதா...
Rate this:
Share this comment
Cancel
14-பிப்-202001:15:05 IST Report Abuse
N.K (நான் தண்டக்கோண் இல்லை) அந்த கப்பல்ல இருக்குறவங்களையும் ஏதாவது பண்ணி காப்பாத்திடுங்க.
Rate this:
Share this comment
Cancel
13-பிப்-202023:51:24 IST Report Abuse
மாட்டுக்குப்பன் அப்படின்னா கூடிய விறைவில் ஏர் இந்தியா ஊழியர்கள் எல்லாம் வீட்டுக்கு போக தயார்ரா இருங்கன்னு அர்த்தம்????நம்ம பிரதமர் வரவேற்றாலோ பாராட்டினாலொ? கூடிய விரைவில் சங்குதான்னு அர்த்தம்
Rate this:
Share this comment
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
14-பிப்-202013:22:14 IST Report Abuse
Naam thamilarஉண்மை.உண்மை உண்மை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X