சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓராண்டு வேட்டையில் சிக்கிய ரூ. 140 கோடி தங்கம்

Added : பிப் 13, 2020
Advertisement

சென்னை: சென்னை விமான நிலையத்தில், 2019ல் மட்டும், 140 கோடி ரூபாய் மதிப்புள்ள, 355 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தின், பன்னாட்டு முனையத்திற்கு, தினமும், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

பறிமுதல்
அவர்களிடம் நடந்த சோதனையில், 2019ம் ஆண்டில் மட்டும், கடத்தலில் ஈடுபட்டதாக, 1,091 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில், 140 கோடி ரூபாய் மதிப்புள்ள, 355 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2018ல், 85.64 கோடி ரூபாய் மதிப்புள்ள, கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதை விட, 63 சதவீதம் கூடுதலாக, கடந்த ஆண்டில் கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது.கடந்த, 2019 முதல், 2020 ஜனவரி வரை, 10 கோடி ரூபாய் மதிப்பிலான, வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளன. இவை, 2018ம் ஆண்டை விட அதிகம். வன உயிரினங்கள் கடத்தலில், 2019ம் ஆண்டில், 14 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இது, தேசிய அளவில் அதிகம். 2018ல், வன உயிரினங்கள் கடத்தல் தொடர்பாக, மூன்று வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன.

கடந்த ஆண்டில், தடை செய்யப்பட்ட, 53 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, அழகுசாதன பொருட்கள் கடத்தியதாக, ஐந்து வழக்குகள் பதியப்பட்டு, பிடிபட்டவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; ஆனால், 2018ல், இது தொடர்பாக, ஒரு வழக்கு கூட பதியப்படவில்லை.குங்குமப்பூக்கள் மேலும், 2019ல், 1.40 கோடி ரூபாய் மதிப்புள்ள, 65 கிலோ எடையுள்ள, உயர் ரக குங்குமப்பூக்கள் பறிமுதல் செய்யப்பட்டன; 2018ல், 78 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 33 கிலோ எடையிலான குங்குமப்பூக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது
அதேபோல், கடந்த ஆண்டில், கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து, கடத்தி வரப்பட்ட, 6.7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X