பொது செய்தி

தமிழ்நாடு

வருமான வரித் துறையில் ஆஜராகாத விஜய்: நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை

Added : பிப் 13, 2020
Advertisement

சென்னை: சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து, நடிகர் விஜயும், பைனான்சியர் அன்புச்செழியனும் ஆஜராகி விளக்கம் அளிக்காததால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, வருமான வரி புலனாய்வு பிரிவு உயர் அதிகாரிகள், நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.

மதுரையைச் சேர்ந்தவர் பைனான்சியர் அன்புச்செழியன். இவர் மீதான வரி ஏய்ப்பு புகாரில், சென்னை மற்றும் மதுரையில் உள்ள, அவருக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள், நான்கு நாட்கள் சோதனை நடத்தினர். அதில், கணக்கில் காட்டப்படாத, 77 கோடி ரூபாய் ரொக்கம், பல்வேறு சொத்து ஆவணங்கள் மற்றும் பிகில் பட வசூல் தொடர்பான ஆவணங்கள் சிக்கின.

சோதனை

இதையடுத்து, பிகில் படத்தை தயாரித்த, ஏ.ஜி.எஸ்., நிறுவன உரிமையாளர் கல்பாத்தி அகோரம், தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி அகோரம் ஆகியோரின் வீடு, அலுவலகம் மற்றும் சினிமா திரையரங்க அலுவலகங்களில், அதிகாரிகள் சோதனை நடத்தினர்.மேலும், பிகில் படத்திற்கு பெறப்பட்ட சம்பளம் மற்றும் சொத்து மதிப்புகள் குறித்து, நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடமும் விசாரணை நடத்தினர். இவர்களது வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து, விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டது.அதன்படி, ஏ.ஜி.எஸ்., நிறுவன தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி மட்டும், வருமான வரி அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். விஜய் மற்றும் அன்புச்செழியன் தரப்பில், ஆடிட்டர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரி புலனாய்வு பிரிவு தலைமை இயக்குனர் தினேஷ் பட்வாரி தலைமையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில், உயர் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

அவகாசம்

இது பற்றி, வருமான வரி வட்டாரங்கள் கூறியதாவது:நடிகர் விஜய், அன்புச்செழியன் மற்றும் ஏ.ஜி.எஸ்., நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக, ஒருவர் மட்டுமே ஆஜரானார். மற்ற இருவரும், ஆடிட்டர்களை அனுப்பி விளக்கம் அளித்துள்ளனர். விஜய், அன்புச்செழியன் ஆஜராக அவகாசம் கேட்டிருக்கலாம்.அவர்களுக்கான அவகாசம் முடிந்த நிலையில், உயர் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுத்திருக்கலாம். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X