பிரதமர் திட்ட இலவச பயனாளிகளுக்கு 5 கிலோ சிலிண்டர் வழங்க மறுப்பு| Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பிரதமர் திட்ட இலவச பயனாளிகளுக்கு 5 கிலோ சிலிண்டர் வழங்க மறுப்பு

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 13, 2020
ujjwalayojana,GasCylinder,pmujjwalayojana,உஜ்வாலாயோஜனா

பிரதமரின் இலவச திட்ட பயனாளிகளுக்கு, மானிய விலையில், 5 கிலோ சமையல் காஸ் சிலிண்டர் வழங்க, எண்ணெய் நிறுவனங்கள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

பொதுத் துறையைச் சேர்ந்த, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையில், சமையல் காஸ் சிலிண்டர்களை, 'சப்ளை' செய்கின்றன. சிலிண்டர் வாங்கியதும், அதற்கான மானிய தொகை, மத்திய அரசின் சார்பில், வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஏழைகளுக்கு, மத்திய அரசு, 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' என்ற திட்டத்தில், இலவச காஸ் இணைப்பு வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ், சிலிண்டர் வைப்பு தொகை, ரெகுலேட்டரை உள்ளடக்கிய செலவான, 1,600 ரூபாய் இலவசம். மேலும், காஸ் அடுப்பும், சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும். இந்த இரண்டிற்கான பணத்தை மட்டும், வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் மானிய தொகையில், எண்ணெய் நிறுவனங்கள் பிடித்தம் செய்கின்றன.

தமிழகத்தில், 32.43 லட்சம் பேருக்கு, பிரதமரின் இலவச திட்டத்தின் காஸ் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. அதில், பெரும்பாலானோர் ஏழைகள். அவர்களால், 14.20 கிலோ எடை சிலிண்டரை வாங்க முடியவில்லை. இதையடுத்து, அவர்களுக்கு, 5 கிலோ சிலிண்டர்கள், சப்ளை செய்யப்பட்டன. இதற்கான மானிய தொகையும், சிலிண்டர் வாங்கியதும், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப் படும்.

இது குறித்து, பிரதமர் திட்ட பயனாளிகள் கூறுகையில், 'சிலிண்டர் விலை, 800 ரூபாய்க்கு மேல் உள்ளது. இதனால், அதை வாங்க சிரமம் ஏற்படுகிறது. 'அந்த விலை கொடுத்து வாங்கிய பின், மானியதொகை வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறதா என கூட தெரியவில்லை. 5 கிலோ சிலிண்டர் வழங்குமாறு கேட்டால், காஸ் ஏஜென்சிகள் மறுக்கின்றன' என்றனர்.

- நமது நிருபர் -

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X