பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் ஓய்வூதியர்கள் வரும், 18ல் ஆர்ப்பாட்டம்

Added : பிப் 13, 2020 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை: அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் படாததால், போராட்டத்துக்கு தயாராகி வருகின்றனர்.

போக்குவரத்து துறை செயலராக ராதாகிருஷ்ணன் பதவி வகித்தபோது, அரசு பஸ் ஓய்வூதியர்களின் பிரச்னைகள் குறித்து, பலகட்ட பேச்சு நடத்தினார். 2019 செப்., 24ல் நடத்திய பேச்சில், 'ஓய்வூதியம், ஒவ்வொரு மாதமும், 5ம் தேதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்; விதிமுறைகளுக்கு உட்பட்டு, மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்; அகவிலைப்படி உயர்வு தொடர்பாக, 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்' என, வாக்குறுதி அளித்திருந்தார்.

இதுவரை, ஓய்வூதியம் தரும் தேதியை தவிர, மற்றவை நிறைவேற்றப்படவில்லை. அதனால், ஓய்வூதியர்கள் விரைவில், மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.இது குறித்து, போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்க செயலர் கர்சன் கூறியதாவது:அகவிலைப்படி நிலுவை, 2015 நவம்பரில் இருந்து வழங்கப்படவில்லை. விடுப்பு ஒப்படைப்பு தொகை வழங்கப்படவில்லை. 2019 ஏப்., முதல் ஆகஸ்ட் வரை, ஓய்வு பெற்றோருக்கான வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு சம்பளம், ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை போன்ற நிலுவைகள் வழங்கப்படவில்லை. போக்குவரத்து செயலர் எழுதித் தந்தபடி, இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இதனால், வரும், 18ம் தேதி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-பிப்-202009:11:51 IST Report Abuse
Bhaskaran போக்குவரத்துக்கு துறை அதிகாரிகளுக்கு ஒரு சமாச்சாரம் எசமான்களே நீங்களும் பதவியிலிருந்து ஒருநாள் ஓய்வுபெற்று தான் ஆகணும் பதவி சாஸ்வதமில்லை என்பதை கொஞ்சம் நினைவில் வச்சுக்கோங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X