அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தேர்வு முறைகேடுகளுக்கு சி.பி.ஐ., விசாரணை தேவை': ஸ்டாலின்

Added : பிப் 13, 2020 | கருத்துகள் (1)
Advertisement
  'தேர்வு முறைகேடுகளுக்கு சி.பி.ஐ., விசாரணை தேவை': ஸ்டாலின்

சென்னை: 'அனைத்து தேர்வு முறைகேடுகளையும் தொகுத்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்திஉள்ளார்.

'டுவிட்டர்' பக்கத்தில், ஸ்டாலின்கூறியிருப்பதாவது:அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய தேர்வுகளில், தொடர்ச்சியாக முறைகேடுகள் நடந்துள்ளன. இதுதொடர்பான, கைது படலங்கள் நீடித்து வருகின்றன. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக நடத்தப்பட்ட, ஆசிரியர் தகுதி தேர்விலும் முறைகேடுகள் நடந்துள்ளன.

இது குறித்த புகார்கள், தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில், ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள், அதிக தேர்ச்சி பெற்றது குறித்து, முதல்வரிடம் புகார் கொடுத்துள்ளனர். இதற்கான விசாரணையை, அரசு உடனே துவக்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 1, குரூப் - 2 ஏ' மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு என, அணிவகுத்து வரும் அனைத்து குற்றங்களையும் தொகுத்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

பாராட்டு'டுவிட்டர்' பக்கத்தில், ஸ்டாலின் கூறியிருப்பதாவது:புதுச்சேரி கவர்னரின் அச்சுறுத்தலை புறந்தள்ளி, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான தீர்மானம்; சமூக நீதியை காப்பாற்றும் இடஒதுக்கீடு தீர்மானம் ஆகியவை, அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப் பட்டுள்ளன. இதன் வாயிலாக, ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி போன்ற, உயர்ந்த கோட்பாடுகளின் மீது, தனக்கு இருக்கும் ஆழ்ந்த பற்றுதலை, கம்பீரமான முறையில் வெளிக்காட்டி இருக்கிறார், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.இதற்காக, என் ஆட்சியே போனாலும் கவலை இல்லை என, கருணாநிதி பாணியில், அவர் கொண்டிருக்கும் அஞ்சாமையை, பாராட்டி வாழ்த்துகிறேன்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஜெயகுமாருக்கு பதிலடி!

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை:விவசாயிகளுக்கு நலன் பயக்கும், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்டம், முறைப்படி நிறைவேற்றப்பட்டால், அதை ஆதரிக்கும் முதல் நபராக, ஸ்டாலின் இருப்பார்.எல்லா துரோகங்களுக்கும் ஆதரவாகவும், காரணமாகவும் இருந்து விட்டு, இனி புதிய, 'ஹைட்ரோ கார்பன்' திட்டங்களை மட்டும், அனுமதிக்க மாட்டோம் என, விவசாயிகளை ஏமாற்ற, அ.தி.மு.க., அரசு முயற்சி செய்கிறது. இதை, முதலில் துணிச்சலுடனும் எதிர்ப்பதும், ஸ்டாலினாக தான் இருப்பார் என்பதை, அமைச்சர் ஜெயகுமார் உணர்ந்து கொள்வது நல்லது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Desi - Chennai,இந்தியா
14-பிப்-202017:38:51 IST Report Abuse
Desi தீய முக ஒழிந்தால் எல்லா முறைகேடுகளும் ஒழியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X