பொது செய்தி

தமிழ்நாடு

சுப நிகழ்ச்சிகளுக்கு தோட்டக்கலை செடிகள்: முன்பதிவு வசதி அறிமுகம்

Added : பிப் 13, 2020
Advertisement

சென்னை: சுற்றுச்சூழலை மேம்படுத்த, விழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளில், தோட்டக்கலை செடிகள் வினியோகம் செய்ய, அரசு தோட்டக்கலை பண்ணைகளில், முன்பதிவு செய்யலாம்.

நடவுச் செடிசமீப காலமாக, விழாக்கள், பண்டிகைகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளின் போது, விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள், பழக்கன்றுகள் வழங்குவது, பிரபலம் அடைந்து வருகிறது. தமிழ்நாடு தோட்டக்கலை துறை, விழாக்கள், திருமண நிகழ்ச்சிகளுக்கு, தரமான நடவுச் செடிகள் மற்றும் பழச்செடிகளை, குறைந்த விலையில் வழங்கி வருகிறது.

இது போன்ற நடவுச் செடிகள் தவிர, பல்வேறு பழக்கன்றுகள் மற்றும் இதர தோட்டக்கலை பயிர்களின் நடவுச் செடிகள், விருப்பத்தின் அடிப்படையில், உற்பத்தி செய்து வழங்கப்படுகின்றன.

எனவே, வாடிக்கையாளர்கள், வட்டார அளவில் செயல்படும், தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் அல்லது மாவட்ட அளவிலான, தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தை அணுகி, முன்பதிவு செய்யலாம்.இணையதளம்இது தவிர, 'இ - தோட்டம்' என்ற, 'மொபைல் ஆப்' வழியாகவும், நேரடியாக பண்ணைகளிலும் முன்பதிவு செய்யலம். இது தொடர்பான கூடுதல் தகவல்களை, tnhorticulture.tn.gov.in/horti/ என்ற, இணைய தளத்தில் அறியலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X