அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் பொய் பிரசாரம் உதயகுமார் கண்டனம்

Added : பிப் 13, 2020
Advertisement

சென்னை:: 'தமிழக மக்களின் வளர்ச்சிக்கான முயற்சி அறவே இல்லை என்பதை, ஸ்டாலினின் பொய் பிரசாரம் எடுத்து காட்டுகிறது' என, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:காவிரி படுகையை, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து, ஒட்டுமொத்த தமிழர்களின் நம்பிக்கையை நிறைவேற்றி, அவர்களின் பாராட்டுதலை, முதல்வர் இ.பி.எஸ்., பெற்றுள்ளார்.அவரின் சாதனைகளை பொறுக்க முடியாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உளறி வருகிறார்.

காவிரி படுகையை சிறப்பு வேளாண் மண்டலமாக உருவாக்க, சட்ட வல்லுனர்களை வைத்து, தேவையான தனி சட்டங்களை உருவாக்கி, முதல்வர் அனுமதி பெற்று, சாதித்து காட்டுவார்.தி.மு.க., தலைவர் கருணாநிதி மகன் என்ற, ஒற்றை தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு, தமிழனத்திற்கு தலைவனாக வேண்டும் என்ற, பேராசை வெறியோடு, பதவிக்காக அலைந்து திரிகிற, நாலாந்திர மனிதராக செயல்படுவதை, தமிழக மக்கள் அறிவர்.எதிர்க்கட்சி தலைவர் என்ற இலக்கணத்தை மறந்து, பொது நலத்தை துறந்து, சுயநல உச்சத்திற்கு சென்றுள்ளதை, அவரது அவதுாறு பிரசாரம் எடுத்துக் காட்டுகிறது.

நாட்டு நலனையோ, விவசாயிகள் மீது அக்கறையோ, தமிழக மக்களின் வளர்ச்சிக்கான முயற்சியோ, தங்களிடம் அறவே இல்லை என்பதை மட்டுமே, ஸ்டாலின் பொய் பிரசாரம் எடுத்துக் காட்டுகிறது.இவ்வாறு, உதயகுமார் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X