பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம்

Added : பிப் 13, 2020
Advertisement

சென்னை: புகாரின் மீது உரிய விசாரணை நடத்தாத போலீஸ் அதிகாரிகளுக்கு, 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நடவடிக்கைவிருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இருதயராஜ், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாலமன் டேவிட் ஆகியோர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:மதுரை மாவட்டம், கூடல் புதுார் பகுதியில், கிறிஸ்தவ தேவாலய பிரார்த்தனையில் இருந்தபோது, சிலர் எங்களை தாக்கினர்; பைபிள்களை எரித்தனர். அவர்களின் தாக்குதலில், மூன்று பேர் படுகாயம்அடைந்தனர்.சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க, கூடல் புதுார் போலீசில், வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தோம். நடவடிக்கை எடுக்காத போலீசார், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

எனவே, போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் துரை ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:படுகாயமடைந்த மூன்று பேருக்கு, தலா, 20 ஆயிரம் ரூபாயை, தமிழக அரசு வழங்க வேண்டும். அதை, புகார் மனு மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காத, இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், எஸ்.ஐ., முருகன் ஆகியோரிடமிருந்து, தலா, 30 ஆயிரம் ரூபாயாக வசூலித்து கொள்ளலாம்.

அறிவுறுத்தல்

இதுபோன்ற சம்பவங்களில், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை, டி.ஜி.பி., உரிய அறிவுறுத்தல்களை, போலீசாருக்கு வழங்க வேண்டும். மக்களின் உரிமைகள் தொடர்பான பயிற்சியையும், போலீசாருக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X