கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் காங்., நாளை ஆர்ப்பாட்டம்

Added : பிப் 13, 2020
Advertisement

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.பி., யுமான உதித்ராஜ், சென்னை சத்தியமூர்த்தி பவனில், நேற்று அளித்த பேட்டி:இடஒதுக்கீடு தொடர்பாக, உத்தரகண்ட் மாநில அரசு தொடர்ந்த வழக்கில், சமீபத்தில், உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது.

அந்த தீர்ப்பில், 'இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல; இடஒதுக்கீடுக்கான அறிவிப்பை, அந்தந்த மாநில அரசுகளே தீர்மானித்து கொள்ளலாம்' என, கூறியுள்ளது.இந்த தீர்ப்பு நாடு முழுவதும், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, மறு சீராய்வு மனுவை, மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். இடஒதுக்கீட்டை பாதுகாக்க வலியுறுத்தி, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, காங்., சார்பில், நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X