பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜினியரிங் படிப்பு கட்டணம் உயர வாய்ப்பு

Added : பிப் 13, 2020
Advertisement

சென்னை; இன்ஜினியரிங் கல்லுாரி களில், 15 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்ற, புதிய விதியால், கல்வி கட்டணம் உயரும் வாய்ப்பு உள்ளதாக, உயர் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், பொது தேர்வுக்கு பின் மருத்துவம், இன்ஜினியரிங், கட்டடக் கலை மற்றும் கலை, அறிவியல் படிப்புகளில் சேருவர். இந்த படிப்புகளை நடத்துவதற்கு, கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான பணிகளை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலை மேற்கொண்டுள்ளது. திருத்தம்இதன் ஒரு கட்டமாக, இன்ஜினியரிங் மற்றும், 'பார்மசி' கல்லுாரிகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான கல்வி தகுதி, பேராசிரியர்கள் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு, பட்டப் படிப்பின் வகைகள் போன்றவை குறித்து, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிகள் வெளியாகியுள்ளன.

கல்வி தகுதியில், இன்ஜினியரிங் படிப்புக்கு மட்டும், கணிதம் மற்றும் இயற்பியலுடன், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் உள்ளிட்ட, ஏதாவது ஒரு பாடப்பிரிவை சேர்த்து படித்திருக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.

மேலும், இன்ஜி., கல்லுாரிகளின் பேராசிரியர் பதவிக்கு, சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நடப்பு கல்வி ஆண்டு வரை, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 20 மாணவர்களுக்கு, ஒரு பேராசிரியர் வீதம் இருக்க வேண்டும் என்ற, விதி அமலில் உள்ளது. புதிய விதிகளின்படி, வரும் கல்வி ஆண்டு முதல், 15 மாணவர்களுக்கு, ஒரு பேராசிரியர் என்ற விகிதத்தில், ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

இந்த விதியால், ஒவ்வொரு கல்லுாரியும், கூடுதலாக பேராசியர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு கோரிக்கைஅதனால், கல்லுாரி நிர்வாகத்துக்கு கூடுதல் செலவு ஏற்படும். அதை ஈடுகட்டும் வகையில், மாணவர்களின் கல்வி கட்டணத்தை உயர்த்தி அனுமதிக்க வேண்டும் என, கல்லுாரிகள் தரப்பில், அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே, ஏ.ஐ.சி.டி.இ.,யின் புதிய விதிகளால், வரும் கல்வி ஆண்டில், இன்ஜினியரிங் கல்வி கட்டணம் உயரும் வாய்ப்பு உள்ளதாக, உயர் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X