அரசியல் செய்தி

தமிழ்நாடு

'முதல்வர் அறிவிப்பு வெறும் கானல் நீரா?'

Added : பிப் 13, 2020
Advertisement

சென்னை; 'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பு, வெறும் கானல் நீரா' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை:மத்திய அரசு, 2014ம் ஆண்டில் இருந்தே, காவிரி படுகை மாவட்டங்களில், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த, முனைப்பு காட்டி வருகிறது. எட்டு ஆண்டுகளாக, மீத்தேன் திட்டத்தால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைத்து, இத்தகைய, நாசகார திட்டத்தை செயல்படுத்த கூடாது என, தொடர்ந்து போராடி வருகிறேன்.காவிரி படுகை பகுதியான, கடலுார், நாகப்பட்டினம் மாவட்டங்களில், பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு, 45 கிராமங்களில், 57 ஆயிரத்து, 500 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த, தமிழக அரசு குறிப்பாணை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், காவிரி பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, முதல்வர் அறிவித்திருப்பது, கானல் நீராகிப் போய்விடுமோ என்ற கவலை எழுகிறது. காவிரி படுகையில், பெட்ரோலிய, ரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்க, பிறப்பித்த குறிப்பாணையை, தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு, வைகோ கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X