பொது செய்தி

தமிழ்நாடு

டில்லியில் நாளை காவிரி குழு கூட்டம்

Added : பிப் 13, 2020
Advertisement

சென்னை: காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆலோசனை கூட்டம், நாளை டில்லியில் நடக்கிறது.தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை, மத்திய அரசு அமைத்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, தலைவரை நியமிப்பதற்கான பணி நடந்து வருகிறது. இதனால், பல மாதங்களாக, ஆணையத்தின் கூட்டம் நடக்கவில்லை. அதே நேரத்தில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம், மாதந்தோறும் நடந்து வருகிறது. இம்மாத கூட்டம், நாளை டில்லியில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, தமிழக பொதுப்பணித் துறை, காவிரி தொழில்நுட்பக் குழு அதிகாரிகள், இன்று மாலை, டில்லி செல்கின்றனர்.

'தமிழகத்திற்கு இம்மாதம் முதல், மே மாதம் வரை வழங்க வேண்டிய நீரை, முறைப்படி வழங்க வேண்டும். 'காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரை, விரைந்து நியமிக்க வேண்டும். ஆணையத்தின் கூட்டத்தை நடத்த வேண்டும்' என, இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X