பொது செய்தி

தமிழ்நாடு

'மரபணு ஆய்வு கூடங்கள் தமிழகத்தில் அவசியம்': வருவாய் நிர்வாக ஆணையர்

Added : பிப் 13, 2020
Advertisement

சென்னை: ''மரபணு சார்ந்த காரணங்களை கண்டறிந்து, அதற்கான சிகிச்சை அளிக்க வேண்டிஉள்ளதால், மரபணு ஆய்வுக்கூடங்கள் அவசியம்,'' என, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை, போரூர், ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், தனி மனிதருக்கும் ஏற்ற சிறந்த மருந்துகள் பரிந்துரைப்பதை அடிப்படையாக கொண்ட, 'ஜெனோமிக்ஸ்' சார்ந்த மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்த மாநாடு, நேற்று நடந்தது. இதில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்றனர்.மாநாட்டில், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசியதாவது:தென் மாநிலங்களில், நெருங்கிய உறவினர்களுக்கு இடையே, திருமணங்கள் நடக்கின்றன. எனவே, மருத்துவ சிகிச்சையில், மரபணு சார்ந்த காரணங்களை கண்டறிந்து, அதற்கான சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அவர்களுக்கு, தனித்தன்மையான மருந்துகளை வழங்குவதற்கு ஏதுவாக, மரபணு ஆய்வுக்கூடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.பல்கலையின் துணை வேந்தர் விஜயராகவன் பேசுகையில், ''உலகளவில் நோயை தீர்க்கும் சிகிச்சையை விட, நோய் வரும் காரணிகளை கண்டறிந்து, முன்னெச்சரிக்கை சிகிச்சைகள் மேற்கொள்ளும் முறை பெருகிவருகிறது. ''புற்றுநோய் போன்றவற்றில், மரபணு சார்ந்த சிகிச்சைகள், உதவியாக உள்ளன,'' என்றார்.இந்நிகழ்ச்சியில், ராமச்சந்திரா மருத்துவமனையின், மரபணுத் துறை தலைவர் சாலமன் பால், மனித மரபணு மருத்துவர்களின், இந்திய சங்கத்தின் தலைவர் மோய்னக் பானர்ஜி, ஆய்வுத் துறை இணைத் தலைவர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X