பொது செய்தி

தமிழ்நாடு

ஆறுகள் சீரமைப்பு கழகத்திற்கு அதிகாரிகள் நியமனரம்

Added : பிப் 13, 2020
Share
Advertisement

சென்னை; தமிழக நீர்வள ஆதாரங்கள் பாதுகாப்பு மற்றும் ஆறுகள் சீரமைப்பு கழகத்திற்கு, அதிகாரிகளை நியமிக்கும் பணிகளை, அரசு துவக்கி உள்ளது.

தமிழகத்தில், முதல்வர் இ.பி.எஸ்.,சின் நேரடி கட்டுப்பாட்டில், பொதுப்பணி துறை உள்ளது. இவற்றின் கீழ் இயங்கும் நீர்வளத் துறை வாயிலாக, நீராதாரங்களை மேம்படுத்த, அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கி வருகிறது. இந்த நிதியை பயன்படுத்தி, அணைகள், ஏரிகளை துார்வாருதல், கதவணைகள், தடுப்பணைகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இப்பணிகளை முறைப்படுத்துவதற்காக, தமிழக நீர்வள ஆதாரங்கள் பாதுகாப்பு மற்றும் ஆறுகள் சீரமைப்பு கழகத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சத்யகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீர்வளத்துறையில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நான்கு மண்டலங்கள் உள்ளன. மண்டல வாரியாக பணிகளை முறைப்படுத்துவதற்கு, தமிழக நீர்வள ஆதாரங்கள் பாதுகாப்பு மற்றும் ஆறுகள் சீரமைப்பு கழகத்திற்கு, ஓய்வு பெற்ற நான்கு தலைமை பொறியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதேபோல, இரண்டு கண்காணிப்பு பொறியாளர்கள், இரண்டு செயற்பொறியாளர்கள், அலுவலக செயலர், நிதி ஆலோசகர், நிதி மேலாளர் உள்ளிட்டோரும், நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பணிகளை அரசு துவக்கி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X