பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யவில்லை

Added : பிப் 13, 2020
Advertisement

சென்னை: போதிய விழிப்புணர்வு இல்லாததால், கெடு முடிந்தும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள், செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை என, தெரிய வந்துள்ளது.

சென்னை மற்றும் ஒன்பது மாவட்டங்கள் தவிர, மீதமுள்ள, 27 மாவட்டங்களுக்கு, டிச., 27 மற்றும், 30ல், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. ஜனவரி, 2ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டன.மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம், 91 ஆயிரத்து, 975 பதவிகளுக்கு தேர்தல் நடந்து பிரதிநிதிகள் பொறுப்பேற்றுள்ளனர். தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், செலவு கணக்கை தாக்கல் செய்வதற்கான கெடு, 2ம் தேதியுடன் முடிவடைந்தது.

கணக்கு தாக்கல் செய்யாதவர்கள், அடுத்த மூன்று உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது. இருப்பினும், பல வேட்பாளர்கள், இன்னும் கணக்கு தாக்கல் செய்யவில்லை. ஊரகப் பகுதிகளில் உள்ள வேட்பாளர்களுக்கு, போதிய விழிப்புணர்வு இல்லாதது, இதற்கு காரணம். வேட்பாளர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை, தேர்தல் அலுவலர்களும் ஏற்படுத்தவில்லை. இதனால், மூன்று தேர்தலில் போட்டியிட முடியாத நிலை, பலருக்கு ஏற்பட்டுஉள்ளது. இதற்கிடையே, வேட்பாளர்களின் செலவு கணக்கு விபரங்களை சமர்ப்பிக்குமாறு, மாவட்ட நிர்வாகங்களுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X