சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பற்றி அவதுாறு சீமான் மீது வழக்கு

Added : பிப் 13, 2020
Advertisement

சென்னை: தமிழக அரசுக்கு எதிராகவும், வன்முறையை துாண்டும் விதமாகவும் பேசியதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த, 2018 அக்., 2ல், காமராஜரின் நினைவு தினத்தன்று, சென்னை, கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். பின், நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, தமிழக அரசுக்கு எதிராகவும், வன்முறை துாண்டும் விதமாகவும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து, அஜித்குமார் என்பவர், கோட்டூர்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நேற்று சீமான் மீது, இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அதேபோல், மயிலாப்பூர் மாங்கொல்லையில், 2018 அக்., 28ல், பொதுக்கூட்டம் நடந்தது. இதில், திருமுருகன் காந்தி என்பவர், வெவ்வேறு சமூகத்தினரிடையே கலகம் மூட்டும் வகையில், இதிகாசங்களைப் பற்றி இழிவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்த, மயிலாப்பூர் போலீசார், நேற்று கைது செய்தனர். இரு சம்பவங்களும் நடந்து, ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X