கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜெ., வாழ்க்கை சினிமா தடை கோரி தீபா, 'அப்பீல்'

Added : பிப் 13, 2020
Advertisement

சென்னை: தமிழில், தலைவி என்றும், ஹிந்தியில், ஜெயா என்ற பெயரிலும்,ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, படங்கள் தயாரிக்க உள்ளதாக, ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்தன் இந்துாரி ஆகியோர் அறிவித்தனர்.

ஜெ., கதாபாத்திரத்தில், நடிகை கங்கணா என்பவர் நடிக்கிறார்.நடிகை ரம்யா கிருஷ்ணன், 'குயின்' என்ற, இணையதள தொடரில், ஜெ., கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதை, டைரக்டர் கவுதம் மேனன் இயக்குகிறார். இதையடுத்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தாக்கல் செய்த மனு:ஜெ.,வின் புகழுக்கும், மரியாதைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், திரைக்கதை எழுதப்பட்டுள்ளதா என்பதை, நான் உறுதி செய்ய வேண்டும். என் ஒப்புதல் இன்றி, படத் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளக் கூடாது; இணையதள தொடரும்தயாரிக்கக் கூடாது; வெளியிடவும் கூடாது.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, தலைவி படத்தின் தயாரிப்பாளர்கள், மனுதாரருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், ஒரு காட்சியில் கூட, மனுதாரரை சித்தரிக்க மாட்டோம் என, உத்தரவாதம் அளித்து உள்ளனர்.

'அதனால், இடைக்கால தடை பிறப்பிக்க முடியாது' என, உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், தீபா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, இயக்குனர்கள் விஜய், கவுதம் மேனன் மற்றும் விஷ்ணுவர்தன் இந்துாரிக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X