கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் மீதான சொத்து வழக்கு முடிக்கும்படி ஐகோர்ட்டில் கோரிக்கை

Added : பிப் 13, 2020
Advertisement

சென்னை; அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்து குவிப்பு புகார் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை சமர்ப்பித்த விசாரணை அறிக்கையை ஏற்று, வழக்கை முடிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மகேந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனு:அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ௨௦௧௧ சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட போது, அசையும் சொத்து, ௧௮.௮௮ லட்சம் ரூபாய்; அசையா சொத்தின் மதிப்பு, ௧௯.௧௧ லட்சம் ரூபாய் என, குறிப்பிட்டிருந்தார். அமைச்சரான பின், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அளித்த புகார் மீது, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டது.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், எஸ்.பி.,அந்தஸ்துக்கு குறையாத, ஐ.பி.எஸ்., அதிகாரி தலைமையில் விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தது.அதன்படி, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வழக்கு தொடர்பாக, பொதுத் துறை செயலர் தரப்பில், சீலிடப்பட்ட உறையில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவு:லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி., விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில், எழுத்துப்பூர்வ பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஐ.பி.எஸ்., அதிகாரி விரிவான விசாரணை மேற்கொண்டு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கவில்லை என, முடிவு செய்திருப்பதாகவும், அதை ஏற்று, விசாரணையை முடிக்கும்படியும், அமைச்சர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோரினார்.ஆரம்ப விசாரணை என்ற ரீதியில், விரிவான விசாரணை நடத்தியிருப்பதை, ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.

எனவே, விரிவான விசாரணைக்கான முகாந்திரம் என்ன என்பது குறித்து, மூத்த வழக்கறிஞர் ஐ.சுப்ரமணியன், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X