கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தேர்வு முறைகேடு வழக்கு இருவருக்கு ஜாமின் மறுப்பு

Added : பிப் 13, 2020
Advertisement

சென்னை: அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு செய்த, போலீஸ்காரர் மற்றும் பணம் கொடுத்து பணி வாங்கியவர் ஆகியோரின், ஜாமின் மனுக்களை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 4, குரூப் - 2-ஏ' தேர்வுகளில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்து, 41 பேரை கைது செய்துள்ளனர்.இதில், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார், முதல் நிலை காவலராக பணிபுரிகிறார். இவர், குரூப் - 2-ஏ தேர்வில், வெற்றி பெற செய்வதாகக் கூறி, ஏழு பேரிடம், 40 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளார். இதே தேர்வில், தன் மனைவி மகாலட்சுமியை தேர்ச்சி பெற வைத்து, வருவாய் துறையில், வேலை வாங்கிக் கொடுத்துள்ளார்.

இதேபோல, குரூப் - 2ஏ தேர்வில் வெற்றி பெற, 13 லட்சம் ரூபாய் கொடுத்து, சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக, ஆனந்தன் என்பவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர்கள் இருவரையும், போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், முத்துக்குமாரும், ஆனந்தனும் ஜாமின் கேட்டு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி செல்வக்குமார், இருவரது ஜாமின் மனுக்களையும், தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X