கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மகளிடம் சில்மிஷம் தந்தைக்கு, '5 ஆண்டு' பாலியல் சிறை

Added : பிப் 13, 2020
Advertisement

சென்னை: மகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட தந்தைக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை, அயனாவரத்தை சேர்ந்தவர் அமுதா, 31. இவரது கணவர் ஏழுமலை, 35. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், 'மூத்த மகளிடம், என் கணவர்பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்' என, போலீசில் அமுதா புகார் அளித்தார். அயனாவரம் அனைத்து மகளிர் போலீசார், ஏழுமலையை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன் நடந்து வந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் ஸ்ரீலேகா வாதாடினார். இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். 'குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், குற்றவாளிக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X